நடிகர் பிரசாந்திற்கு எப்போது திருமணம்? மனம் திறந்த தந்தை தியாகராஜன்
நடிகர் பிரசாந்திற்கு திருமணம் செய்வது குறித்து அவரது தந்தை தியாகராஜன் பேசியுள்ளார்.
பிரசாந்த்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். சில காலம் நடிப்பில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
விஜய் நடித்து வரும் GOAT படத்தில் பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பிரசாந்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜனின் இயக்கத்தில், பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
திருமணம்
இதனையடுத்து படக்குழு வெற்றி விழா கொண்டாடியது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போதுமேடையில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “படப்பிடிப்பின் போது "பிரசாந்துக்கு எப்போது கல்யாணம்?" என தியாகராஜனிடம் கேட்டேன். அதற்கு அவர், இந்த படம் வெற்றியடைந்தால் சொல்கிறேன்’ என்றார். அதனால் இப்போது அவர் அதைப்பற்றி பேசுவார்” என மேடையிலேயே தியாகராஜனை அழைத்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய தியாகராஜன், “எனக்கு மிகவும் மனவருத்தமான விஷயம் என்னவென்றால் பிரசாந்தின் திருமண வாழ்க்கைதான். அவர் அம்மாவும், நானும் அதைப் பற்றி யோசிக்காத நேரமும், நாளும் இல்லை. உண்மையிலேயே பிரசாந்துக்கு அவர் அம்மா திருமண வரனுக்காக நல்ல அழகான பெண்ணை தேடி வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு, பட வேலைகளை எல்லாம் நிறுத்திவிட்டு விரைவில் என் மகனுக்கு ஒரு பெண்ணை தேடி கல்யாணம் பண்ணிவைப்பதுதான் என் வேலை. இதை ஞாபகப்படுத்திய கே.எஸ்.ரவிக்குமாருக்கு மிகவும் நன்றி. கண்டிப்பாக கல்யாணம் நடக்கும்” என பேசினார்.
நடிகர் பிரசாந்துக்கு கிரகலட்சுமி என்ற பெண்ணுடன், கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்தானது குறிப்பிடத்தக்கது.