செவ்வாய் கிரகத்தின் ஆட்டம் - காதல் வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கும் ராசியினர் இவர்கள் தான்!
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் காதல் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் குறித்து இதில் காணலாம்.
காதல் வாழ்க்கை
செவ்வாய் கிரகமானது ரிஷப ராசியில் இடம் பெயர்ந்தது. எனவே செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு சில மாற்றம் ஏற்படக்கூடும். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளை ஆட்சி செய்கிறார். செவ்வாய் தனது சொந்த ராசியில் அமைந்திருப்பதால், சக்தி வாய்ந்த யோகம் உருவாகும்.
அதாவது ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 26 வரையிலான இந்த காலகட்டத்தில் காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் பற்றி பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு முதல் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் இம்முறை இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் கணவன் மனைவி உறவுக்கு இடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். இருவரும் தங்கள் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
காதல் உறவில் இருப்பவர்கள் தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். இதுவே தங்களது காதல் உறவின் பொற்காலமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாவது மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் இந்த முறை ரிஷப ராசிக்காரர்களின் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதனால் இருவருக்கிடையே உள்ள காதல் உறவை பலப்படுத்துகிறது.
இந்த ராசிகாரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையின் அன்பை முழுதாக அனுபவிப்பார்கள், இருவருக்கும் இடையேயான உறவு வலுவடையும். அதுமட்டுமின்றி நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி தேடிவரும்.
கடகம்
கடக ராசியின் ஐந்து மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் மற்றும் கடக ராசிக்காரர்களின் பதினொன்றாம் வீட்டில் சஞ்சாரம் நடக்கிறது. எனவே இந்த காலம் திருமணமானவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் காதல் உறவில் உள்ள இருவரும்,
ஒன்றாக மகிழ்ச்சியான நேரத்தை செலவிட முடியும். உங்கள் துணையின் செயல்பாடுகள் மிகவும் மகிழ்ச்சி தரக்கூட வகையில் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் கடக ராசிக்காரர்களின் ஏழாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்கு உங்கள் துணைக்கும் இடையே நல்ல நட்புணர்வும், காதலும் அதிகரிக்கும்.
தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பும், புரிதலும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.
மீனம்
விருச்சிக ராசியின் இரண்டாவது மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் மீன ராசிக்காரர்களின் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியினர் தங்களது காதல் உறவை வலுப்படுத்த எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவார்கள்.
இந்த காலகட்டத்தில் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் இடையே மகிழ்ச்சியும், நெருக்கமும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு - இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)