காதலித்து ஏமாற்றக்கூடிய ராசிகள் இவர்கள் தான் - இந்த 4 ராசிக்காரர்களிடம் உஷாராக இருங்கள்!
காதல் இதயத்தை உடைக்கும் அந்த நான்கு ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த 4 ராசிகள்
அனைவரது வாழ்விலும் காதல் என்பது மிக முக்கியமானது. ஆனால் எவ்வளவு புனிதமான காதலாக இருந்தாலும் ஒரு சிலரது மட்டுமே கல்யாணத்தில் முடியும். அதே போல காதல் திருமணம் செய்து கொண்ட அனைவரும் சந்தோஷமாக வாழ்வதும் இல்லை.

அதற்கு பல காரணங்கள் இருக்கும். அப்படி திடீரென காதலை, இதயத்தை உடைக்க கூடிய ராசிகள் யார் என தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசிகாரர்கள் தங்களின் வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டவர்கள். அதற்காகவும் அவர்கள் தீவிரமாக ஈடுபடுத்துவார்கள். இவர்கள் தாங்கள் விரும்பியதை நிறைவேற்றிக் கொள்வதற்காக பேரார்வமும், போர் குணத்துடனும் செயல்படுவார்கள்.

ஆனால் இவர்களிடம் உள்ள பெரிய பிரச்னையே எதிலும் சீக்கிரம் கோபப்படுவது தான். இவர்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில், தங்களின் துணையை கவனிக்காமல், சலிப்படைய வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் மேஷ ராசியினருக்கும், அவர்களின் துணைக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுமாம். இதுவே காதல் என்ற சூழலில் இருவரிடையே சரியான உறவு நீடிக்காமல், பிரேக்-அப் நிலைக்கு சென்று விடும்.
மிதுன ராசி
பொதுவாக எந்த ஒரு சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை அமைத்து கொள்வார்கள். வாழ்க்கையில் சுதந்திரம் தேவைப்படுகிறது என நினைத்தாலும், தன்னுடைய உறவுகளை விட்டு வெளியேற தயங்க மாட்டார்கள்.

அது காதலாக இருந்தாலும் சரி, திருமண உறவாக இருந்தாலும் சரி. இவர்கள் காதல் உறவிலும் முடிவு எடுப்பதில் உறுதியற்றவர்களாக இருப்பார்கள். மேலும் காதல் அல்லது திருமண வாழ்க்கையில் துணையின் மனதை சங்கடப்பட வைப்பது, சலிப்படைய செய்வது இவர்களின் வாடிக்கை.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியினர் பொதுவாக எல்லா விஷயத்திலும் தீவிரமானவர்களாகவும், மர்மமானவர்களாகவும் இருப்பார்கள். எனவே இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பிறரால் எளிதில் கணிக்க முடியாது. இந்த ராசியினரிடம் மற்றவர்களை ஈர்க்கக்கூடிய கவர்ச்சியான குணநலன்கள் இருக்கும்.

ஆழமான உணர்வுகளை கொண்ட இவர்கள் பல நேரங்களில் தன் அன்புக்குரியவர்களிடம் பொறாமைப்படவும் செய்வார்கள். இவர்கள் தன் வாழ்க்கைத் துணைக்கு அன்பையும், அர்ப்பணிப்பையும் கொடுக்கக்கூடியவர்கள்.
தன் துணையிடம் நேர்மையாக இருக்க விரும்புவதோடு மட்டுமல்லாமல், தன் துணையும் அதேபோல இருக்க நினைக்கக் கூடியவர்கள். இதில் ஏதேனும் சிறு சந்தேகம் வந்தாலும் எந்த ஒரு தயக்கம் என்னவென்று காதலை விட்டு வெளியேற நினைப்பார்கள். இதனால் அவர்களது இதயம் உடைந்தாலும் கவலைப்படமாட்டார்கள்.
மீன ராசி
மீன ராசிகாரர்கள் எப்போதும் கற்பனை உலகில் வாழ நினைப்பார்கள். அவர்கள் காணும் கனவை, நிஜ வாழ்க்கையில் தன் துணையிடமும் எதிர்பார்ப்பார்கள். அது பெரியளவில் சந்திப்பது சந்தேகமே. காதல் விஷயத்தில் உணர்வு ரீதியாக ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவார்கள்.

இவர்கள் கற்பனை உலகில் இப்படி தான் தன் துணை இருக்க வேண்டும் என நினைப்பது போல, நிஜ வாழ்க்கையில் இல்லாமல் போகும் போது ஏற்படக்கூடிய ஏமாற்றத்தால் இவர்கள் காதல் முறிவுக்கு ஒரு போதும் தயங்காமல் இதயத்தை உடைத்து விட்டு செல்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு - இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil