சனியின் ஆட்டம் ஆரம்பம்; இனி இந்த ராசிக்காரர்களுக்கு சிக்கல் தான்..முழு விவரம் இதோ!
சனி வக்கிரப் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு ஏற்படும் மாற்றங்களை காணலாம்.
சனியின் ஆட்டம்
ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மட்டுமின்றி, அவற்றின் பார்வைகளும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சனி பகவான் இடம் மாறுவதால் அவரது பார்வை படும் கிரகங்களுக்கு ஏற்படும் மாற்றம் சற்று அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில், ஜூன் மாதம் 1ம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்தார். இதனால் சனியின் மூன்றாம் பார்வை மேஷ ராசியில் உள்ள செவ்வாயின் மீது பதிவதால், சில ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை சந்திக்கப் போகிறார்கள்.
கடகம்
சனியின் மூன்றாம் பார்வையானது கடக ராசி மீது படுகிறது. இதனால் கஷ்டங்களை தரும், முக்கியமாக நிதி இழப்பை ஏற்படுத்தும். தேவையில்லாத சிந்தனைகள் ஏற்பட்டு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி, தொழில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
குறிப்பாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சில சிரமங்கள் ஏற்படும் என்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்திட வேண்டும்.மிக முக்கியமாக பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
சனியின் மூன்றாவது பார்வையானது கடக ராசி உடையவர்கள் மீது படுவதால் அவர்கள் கடும் தாக்கத்தை சந்திக்க நேரிடலாம்.குறிப்பாக பண இழப்பு, வருமானத்தில் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏதேனும் ஒரு விஷயத்தை நினைத்து மன அழுத்தகம் உண்டாகலாம்.
தொழிலில் ஏற்றம் வராமல் தடங்கல் ஏற்படும். விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் எதிரிகள் உங்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்தலாம்.
துலாம்
சனி பகவான் துலாம் ராசிகாரர்களுக்கு தீங்கு விளைவிக்க உள்ளார்.குடும்பத்தில் பிரச்சனை,பண இழப்பு,சொத்து பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். திருமணம் ஆவதில் சில காலம் தடை பட்டு போகலாம். அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்கலாம்.
அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாததால் வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காண்பது கடினமாக இருக்கும்.
பரிகாரம்
சனியின் வக்ர சஞ்சாரத்தை தவிர்க்க ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவான் கோயிலுக்கு சென்று எள் தீபம் ஏற்ற வேண்டுமாம். சனி பகவானுக்கு கடுகு எண்ணெயால் அபிஷேகம் செய்வது அவரின் கோபத்தை தவிர்க்குமாம். சனிக்கிழமை நாளில் அனுமனை வழிபடுவதும் நல்லதாகும்.
(பொறுப்பு துறப்பு - இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)