Friday, Apr 4, 2025

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும் - தொடங்குகிறது ஏழரை சனி

By Thahir 2 years ago
Report

ஏழரை சனி தொடங்குவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் இடம்பெயருவதால் தனுசு ராசியினர் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள்.

அதேநேரத்தில் மீன ராசிக்கு ஏழரை சனி தொங்குகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால், யாருக்கெல்லாம் லாபம், யாருக்கெல்லாம் சங்கடம், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும் - தொடங்குகிறது ஏழரை சனி | Be Careful With These Zodiac Signs

சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும்.

நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இடம்பெயரக்கூடிய சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயருவதற்கு இரண்டை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்.

அந்த வகையில் 2023 ஜனவரி 17ம் தேதி செவ்வாய் கிழமை, மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆக உள்ளார்.

விடுதலை பெறப்போகும் ராசிகள்

சனிப்பெயர்ச்சி காரணமாக ஏழரை சனியில் இருந்து தனுசு ராசியினர் விடுதலை பெறுகின்றனர்.

அஷ்டம சனியில் அவதிப்பட்டு வந்த மிதுன ராசிக்கு இனி வரும் காலம் யோகமாக அமையப்போகிறது.

அதேபோல் ரிஷபம் மற்றும் கன்னி ராசியினருக்கும் நல்ல காலம் காத்திருக்கிறது. கண்ட சனி தொடங்கும் சிம்ம ராசியும் கவனமாக இருப்பது அவசியம். 

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் 

ஏழரை சனி தொடங்கும் கும்ப ராசி, அஷ்டம சனி தொடங்கும் கடக ராசி, அர்த்தாஷ்டம சனி தொடங்கும் விருச்சிக ராசி ஆகியவை கவனமாக இருக்க வேண்டும்.