இந்த ராசியினரின் திருமண வாழ்கை அமோகமா இருக்கும் - சிறந்த ஜோடியா இருபாங்களாம்!
எந்தெந்த ராசிக்காரர்கள் மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
சிறந்த ஜோடி
திருமணம் என்பது ஆயிரக்காலத்து பந்தம் என்று சொல்லுவார்கள். அப்படி நல்ல துணை அமைந்து நம்முடைய வாழ்க்கையில் சில தம்பதிகள் பல ஆண்டு காலம் மிகவும் அன்னியோன்னியமாக,
பிறர் பொறாமை படக்கூடிய அளவு சிலர் வாழ்ந்துக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில், திருமண வாழ்க்கையில் அன்பும், கரையும் நிறைந்த ஜோடிக்கு தகுதியானவர்களாக இருக்கக்கூடிய ராசிகள் பற்று தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷ ராசியினர் தன் துணையிடம் மிகுந்த அக்கறையுடனும், அன்புடனும் இருப்பார்கள். இவர்களது துணையிடம் மிகவும் நம்பிக்கை தரக்கூடியவர்களாகவும், உணர்வு ரீதியாக பிணைப்புடன் இருப்பார்கள். இந்த நிலையில், மேஷ ராசிக்கு கோபம் சற்று அதிகமாக வரும் என்றாலும், தன் துணையிடம் அக்கறையுடன் இருப்பார்கள்.
மேஷ ராசியினர் காதல் அல்லது திருமண வாழ்க்கையில் மிகுந்த நேர்மையுடன் இருப்பார்கள். உறவு வலுப்பட எந்தெந்த விஷயங்கள் செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து எல்லா விஷயங்களையும் சிறப்பாக செய்யக்கூடிய நபர்களாக செயல்படுவார்கள்.
ரிஷப ராசி
ரிஷப ராசி உடையவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் தனது உறவுகளை வலுவாக கையாள்வதில் மிகுந்த அக்கறையை காட்டுவார்கள். தன் துணையை மிகவும் அதிகமாக நேசிக்க கூடிய ரிஷப ராசியினர், அவர்களை ஆனந்தமாகவும், ஆடம்பரமாகவும் வாழ நினைப்பார்கள்.
மேலும் தன் துணை உடன் நீண்ட நேரம் செலவிட நினைக்கக் கூடிய நபர்களாக இருப்பார்கள். சுக்கிரனை அதிபதியாக கொண்ட இவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியாக புரிந்துக் கொள்வார்கள்.
மகர ராசி
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசியினர் உணர்ச்சிகள் ததும்பும் நபர்களாக இருப்பார்கள். தன் திருமண வாழ்க்கையில் தனக்கென வந்த துணைக்கு சிறந்த துணையாக விளங்கக்கூடிய நபர்களாக திகழ்வார்கள்.
கடின உழைப்பாளிகளான இவர்கள் தன் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற மனோபாவம் கொண்டவர்கள். சனியின் குணமான கடின உழைப்பு, நேர்மையுடையவர்களாகவும் இருப்பார்கள்.