இந்த ராசிகாரர்களுக்கு காந்தம் போல ஈர்க்கும் சக்தி இருக்காம் - இவங்க ஜோடி கொடுத்து வச்சவர்கள்!
காந்தம் போல ஈர்க்கும் சக்தி கொண்ட ராசிகாரர்கள் குறிந்து விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
ஈர்க்கும் சக்தி
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் காதல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு சிலருக்கு அதில் வெற்றி அடைவார்கள், ஒரு சிலர் தோல்வி அடைவார்கள். இவற்றில் பெரிய கஷ்டம் என்றால் தனக்கு பிடித்தவர்களை ஈர்ப்பது எப்படி என்று தெரியாமல் திண்டாடுவது தான்.
அதில் பல பேர் வீக்காக இருப்பார்கள். ஆனால் ஜோதிடத்தின் படி, சில ராசிகளில் காந்தம் போல ஈர்க்கும் சக்தி பிறப்பில் இருந்தே இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் எங்கு சென்றாலும் அன்பைப் பெற்று பரப்புவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் அவர்களுடன் நெருங்கி பழக விரும்புவார்களாம்.
மேஷம்
இந்த ராசிக்காரர்கள் எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். மிகவும் கவர்ச்சிகரமானவர்கள். செவ்வாய்யின் ஆதிக்கத்தால் இயற்கையாகவே தலைமைப் பண்பு உடையவர்களாக இருப்பார்கள். எளிதாக உறவை வளர்த்துக்கொள்வார்கள்.
புதிதாக அறிமுகமானவர்கள் அல்லது நீண்டகால பழக்கமுடையவ்ர்களாக இருந்தாலும் விரும்பப்படுகிறார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய பேரை ஈர்க்கும் சக்தி உள்ளது.
ரிஷபம்
இந்த ராசியில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் அனைவருக்கும் மிகவும் நெருக்கமானவர்கள். சுக்கிரன் இந்த ராசியை ஆள்கிறார்.
எனவே இயற்கையாகவே உறவில் அன்பு, அழகு மற்றும் அமைதி இருக்கும்.
சிம்மம்
சிம்மம் காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. எனவே, இவர்களது கம்பீரமான ஆளுமை திறமை வசீகரமானதாக இருக்கும். அவர்களின் வார்த்தைகளும் உணர்ச்சிகளும் மற்றவர்களை கவர்ந்து
அவர்களை காதலிக்க வைக்கின்றன. மற்றவர்களுடனான அவர்களின் உறவுகள் மிகவும் கண்ணியமாக இருக்கும்.
துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் துலாம் இயற்கையாகவே கவர்ச்சிகரமானவர்களாகவும். திறமையானவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசிகாரர்கள் மற்றவர்களுடன் ஆழமான, உணர்ச்சி மிகுந்த உறவுகளை உருவாக்குவதில் திறமையானவர்கள்.
எனவே, அவர்கள் மற்றவர்காளிடம் வைத்திருக்கும் உறவு மிகவும் அழகானதாகவும் மற்றும் சீரானதாகவும் இருக்கும். இதனால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுகிறார்கள்.
மீனம்
இந்த ராசி மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியது. அவர்கள் எப்போதும் அன்பில் தூய்மையானவர்களைத் தேடுகிறார்கள்.
அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் மிகவும் கவனித்துக் கொள்கிறார்கள். எனவே மீனம் பலருக்கும் பிடிக்கும்