இந்த 2 டீம்தான் பைனலுக்கு போகும் - அடித்து சொல்லும் ஜாம்பவான்கள்!
எந்த டீம்கள் பைனலுக்கு செல்லும் என்று 2 ஜாம்பவான்கள் கணித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி
சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கும் இந்த தொடர் மார்ச் 09ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் குரூப் பி-யிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் குரூப் ஏ-விலும் உள்ளன.
ஜாம்பவான்கள் கணிப்பு
3 போட்டிகளில் விளையாடி அதில் முன்னிலை பெறும் 4 அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி எந்த அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்னேறும் என கணித்துள்ளனர்.
இருவரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு முன்னேறும் என தெரிவித்துள்ளனர். மேலும், அரை இறுதி போட்டிக்கு மற்றொரு அணிகளாக இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா முன்னேறும் என இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.