இந்திய அணி வெற்றி பெற செய்த மிகப்பெரிய மோசடி? இங்கிலாந்து அதிருப்தி!
இந்திய அணி வெற்றி பெற செய்த மிகப்பெரிய மோசடிக்கு இங்கிலாந்து அணி அதிருப்தி தெரிவித்துள்ளது.
Ind-Eng
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடைசி மற்றும் 5வது போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி நடக்கிறது.
இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியபோது அரைசதம் அடித்த ஷிவம் துபே, பந்துவீச்சின்போது பீல்டிங் இறங்கவில்லை.
அவருக்கு பதிலாக கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக ஹர்ஷித் ராணா களம் இறங்கினார். ஆனால், ஐசிசி விதிப்படி, ஒரு பிளேயருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் அல்லது விளையாட முடியாமல் போனால் அவருடைய திறமைக்கு நிகரான ஒரு பிளேயரை மட்டுமே களமிறக்க வேண்டும்.
இங்கிலாந்து அதிருப்தி
இதில், துபே ஒரு அதிரடி பேட்ஸ்மேன், மீடியம் வேகப்பந்து வீசக்கூடியவர். அவருக்கு பதிலாக களமிறங்கிய ஹர்ஷித் ராணா அக்மார்க் வேகப்பந்துவீச்சாளர். இந்திய அணியின் இந்த செயலை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன் உள்ளிட்டோர் மோசடி எனக் கூறி விமர்சித்துள்ளனர்.
மேலும், இந்திய அணிக்கு மட்டும் இம்பாக்ட் பிளேயர் விதியை ஐசிசி பிரத்யேகமாக கொடுத்துவிட்டதா? என அலையஸ்டர் குக், கெவின் பீட்டர்சன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.