எழுதி வச்சிக்கோங்க..இந்த 2 அணி தான் இறுதிப்போட்டிக்கு வரும் - கணித்த ஹர்பஜன் சிங்!

Indian Cricket Team Harbhajan Singh T20 World Cup 2024
By Swetha Jun 27, 2024 08:00 AM GMT
Report

இறுதிப்போட்டியில் விளையாடப் போகும் அணிகளை இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.

இந்த 2 அணி தான்..

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி தொடங்குகிறது. முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்தியா - இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதுகின்றன.

எழுதி வச்சிக்கோங்க..இந்த 2 அணி தான் இறுதிப்போட்டிக்கு வரும் - கணித்த ஹர்பஜன் சிங்! | These Two Team Will Play In Final Predicts Harbhaj

சென்றமுறை அரையிறுதி போட்டியில் விளையாடிய போது இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. அதுமட்டுமின்றி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ஆனால் இம்முறை இந்திய அணி வலுவான அணியாக பார்க்கப்படுகிறது.

தோனி ஆடுவது வேலைக்கு ஆகாது..அவருக்கு பதில் இதை செய்யலாம் - விளாசிய ஹர்பஜன் சிங்!

தோனி ஆடுவது வேலைக்கு ஆகாது..அவருக்கு பதில் இதை செய்யலாம் - விளாசிய ஹர்பஜன் சிங்!

ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் மனநிலையில் மாற்றமடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்கு கடுமையான சவால் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள அணிகள் குறித்த கணிப்பை இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.

எழுதி வச்சிக்கோங்க..இந்த 2 அணி தான் இறுதிப்போட்டிக்கு வரும் - கணித்த ஹர்பஜன் சிங்! | These Two Team Will Play In Final Predicts Harbhaj

அவரின் கணிப்பு படி, தென்னாப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதியில் இந்திய அணியும் வெல்லும் என்று கணித்துள்ளார். ஆசிய அணிகள் இரண்டும் இறுதிப்போட்டியில் மோதும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.