மூன்று ராசிகள் மிகவும் ஆபத்தானவர்கலாம்.. இவங்ககிட்ட கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க!
மிகவும் ஆபத்தான மூன்று ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஆபத்தானவர்கலாம்..
ஜோதிடத்தை பொருத்தவரை, மொத்த 12 ராசிகளும் நெருப்பு, நிலம், காற்று, நீர் ஆகிய நான்கு உறுப்புகளின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் நீர் உறுப்பில் உள்ள அந்த மூன்று ராசிகார்களுடன் சற்று பார்த்து நடந்துகொள்ள வேண்டுமாம்.

அவர்களிடம் பகை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல என குறிப்பிடப்படுகிறது. இந்த நீர் ராசியினர்களின் குணம் சிலருக்கு ஏதுவாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. அதாவது,
- நெருப்பு ராசி - மேஷம், சிம்மம், தனுசு
- காற்று ராசி - மிதுனம், துலாம், கும்பம்
- நிலராசி - ரிஷபம், கன்னி, மகரம்
- நீர் ராசி - கடகம், விருச்சிகம், மீனம் என இவை வகைப்படுத்தப்படுகிறது.
இவற்றுள் நீர் ராசியின் கீழ் வரக்கூடிய கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளிடம் பகைமை வளர்ப்பது தவிர்ப்பது நல்லது.
மூன்று ராசிகள்
இந்த ராசியினர் சேர்ந்தவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் தீவிரத் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களை விட தங்களின் செயல்பாட்டில் முன்னிலையில் இருப்பார்கள். சிறிய விஷயங்களாக இருந்தாலும் எதிரியை எளிதாக தோற்கடிக்க வாய்ப்பு உள்ளதான நினைப்பவர்கள். இவர்கள் அன்பானவர்களாக இருந்தாலும் உணர்ச்சிவசத்தைக் கட்டுப்படுத்த தெரியாதவர்கள்.
மேலும் இவர்களை சமாதானப்படுத்த கடுமையான முயற்சி செய்ய வேண்டியது இருக்கும். நீர் ராசிகளிடம் பல்வேறு நேர்மறையான மற்றும் அன்பான குணம் நிறைந்து இருந்தாலும், இவர்களின் பழிவாங்கும் குணம் காரணமாக அவர்களிடம் பகைமையை கொள்வது கேடானதாக இருக்கும்.
கடக ராசி
கடக ராசியினர் மிகவும் கருணை உள்ளம் கொண்டவர்கள். பிறர் கஷ்டத்தைக் கண்டு தேடி சென்று உறவாக நினைப்பவர்கள். நட்பு மற்றும் திருமண வாழ்க்கையில் அவரின் தேவையை புரிந்து நடந்துக்கொள்வார்கள்.

பிறரையும் தன் குடும்பத்தை போலவே நினைக்கக் கூடியவர்கள். ஆனால் நட்பு மற்றும் திருமண உறவில் அவாருடன் ஒருவர் நேர்மையாக இல்லை என தெரிந்தால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பழிவாங்க நினைப்பார்கள்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி ஒரு மர்மமான ராசியினர் எனலாம். அவர்களின் சிந்தனை, செயல்பாடு என அனைத்தும் யாராலும் எளிதில் கணிக்க முடியாத அளவிற்கு மர்மமாகவே இருக்கும். அதேபோல அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்.

வேலையில் முழு திறனை பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவார்கள். மேலும் விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் தன்னை போலவே தன் துணையையும்,
அவர்களது குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள விரும்புவார்கள். இவர்களிடம் பகை கொண்டால் இவர்களின் எதிர்மறையான செயல்பாடு மற்றும் பிடிவாத குணம் பல வகையில் பிரச்சனையை தரக்கூடியதாக இருக்கும்.
மீன ராசி
மீன ராசியினர் அன்பும், பாசத்தையும் அள்ளித் தரக்கூடியவர்களாக இருப்பார்கள். பொதுவாக கற்பனை உலகில் வாழக்கூடிய இவர்கள், பிறரின் விஷயத்தில் பெரிய அளவில் தலையிடமாட்டார்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் இவர்கள் கல்வி, வேலைகள் சிறப்பாக செயல்படுவார்கள்.

நிதி விஷயங்களை சிறப்பாக கையாளுவார்கள். அதே சமயம் இவர்களை பகைத்துக் கொண்டால் தேவையற்ற பிரச்சனையை சந்திக்ககூடும். அதனால் இவர்களிடம் பகைமை வளர்த்துக் கொள்ளாமல் செயல்படுவது நல்லது.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    