இந்த முன்று வீரர்களும்.. என் மகன் வாழ்கையை அழித்துவிட்டார்கள் - சஞ்சு சாம்சன் தந்தை குமுறல்!
மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள் என்று சஞ்சு சாம்சனின் தந்தை தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன்
சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், அடுத்தடுத்து 2 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் இடத்தில்,
சஞ்சு சாம்சனை தொடர்ச்சியாக களமிறக்க வேண்டும் என்ற பேச்சுகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கேற்றவாறு அவர் தொடர்ந்து விளையாடி வருவதால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இணைந்து
தந்தை குமுறல்
எனது மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு காயப்படுத்தினாலும், எனது மகன் சிக்கலை எதிர்கொண்டு சாதித்திருக்கிறார். அதேபோல் முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்தின் வார்த்தைகள் எங்களை காயப்படுத்தியுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி சதம் விளாசிய பின், ஸ்ரீகாந்த் கொஞ்சம் கூட பாராட்டவில்லை. சாதாரண அணியான வங்கதேசத்துடன் தான் சஞ்சு சாம்சன் சதம் அடித்துள்ளார் என்று கிண்டல் செய்கிறார். யாருடன் சதம் அடித்தாலும்,
அது சதம் தான். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரை போல் சஞ்சு சாம்சன் தனது ஸ்டைலில் ஒரு கிளாசிக் சதத்தை அடித்ததாக நினைக்கிறேன். அதனால் சஞ்சு சாம்சனுக்கான மரியாதையை சீனியர்கள் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.