அதைவிட டீம்தான் முக்கியம்; அந்த 2 பேர் கொடுத்த அட்வைஸ் அப்படி - விளாசிய சாம்சன்!

Indian Cricket Team Sanju Samson Gautam Gambhir Suryakumar Yadav
By Sumathi Nov 09, 2024 08:30 AM GMT
Report

தனிநபர்களின் நலனை விட அணியின் நலனே முக்கியம் என சாம்சன் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்துள்ளார். இதன் மூலமாக தொடர்ச்சியாக 2 டி20 போட்டிகளில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

sanju samson

இதுகுறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், 'களத்தில் இன்று நான் ஆடிய ஆட்டத்தை வெகுவாக மகிழ்ந்து அனுபவித்தேன். நான் இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறேன். அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கான ஒரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறேன்.

அட்டாக்கிங்காக அக்ரஸிவ்வாக முனைப்போடு ஆடவேண்டும் என்பதைத்தான் எங்களின் அணுகுமுறையாக வைத்திருக்கிறோம். தனிப்பட்ட ரெக்கார்டுகளை விட அணியின் நலனே முக்கியம். ஒரு மூன்று நான்கு பந்துகளை பார்த்து ஆடிவிட்டால் போதும் பவுண்டரிகளை அடித்துவிடலாம்.

கேஎல் ராகுல், சர்பராஸ் கான் வேண்டாம்; அவரை கொண்டு வாங்க - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

கேஎல் ராகுல், சர்பராஸ் கான் வேண்டாம்; அவரை கொண்டு வாங்க - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

அணுகுமுறை

சில நேரங்களில் இந்த அணுகுமுறை கைக்கொடுக்கும். சில நேரங்களில் கைக்கொடுக்காது. இன்று எனக்கு அது ஒர்க் அவுட் ஆனதில் மகிழ்ச்சி. தென்னாப்பிரிக்கா மாதிரியான வலுவான அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலான விஷயம். அப்படியிருக்க தொடரை வெற்றியோடு தொடங்கியதில் மகிழ்ச்சி.' எனத் தெரிவித்துள்ளார்.

அதைவிட டீம்தான் முக்கியம்; அந்த 2 பேர் கொடுத்த அட்வைஸ் அப்படி - விளாசிய சாம்சன்! | Samson Says Team Is More Important Than Century

முன்னதாக, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் நான் மோசமான விளையாடினேன். அதன்பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் செல்ஃபோன் மூலம் என்னை தொடர்பு கொண்டனர்.

கேரளாவில் உள்ள நல்ல ஸ்பின்னர்களை ஒருங்கிணைத்து, கடினமான பிட்ச்களில் பயிற்சி மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள். அதற்கேற்ப பணியாற்றியதால், இப்போது சிறப்பாக செயல்பட முடிகிறது என்று தெரிவித்திருந்தார்.