RCB-ல் எனது பயணம் முடிந்துவிட்டது..? அணி குறித்து வெளிப்படையாக பேசிய மேக்ஸ்வெல்!

Glenn Maxwell Royal Challengers Bangalore IPL 2025
By Swetha Nov 06, 2024 03:00 PM GMT
Report

மேக்ஸ்வெல் RCB அணியில் மீண்டும் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

RCB பயணம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த அண்டு ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. அதற்கான மெகா ஏலம் இந்த மாதம் 24, 25 ஆகிய தினங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக திகாரப்பூர்வ அறிவிப்பையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

RCB-ல் எனது பயணம் முடிந்துவிட்டது..? அணி குறித்து வெளிப்படையாக பேசிய மேக்ஸ்வெல்! | My Journey In Rcb Is Not Over Yet Says Glenmaxwell

முன்னதாக 10 அணிகளும், தங்கள் அணியில் தக்கவைப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த முறை நடைபெற உள்ள மெகா ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், ஆர்சிபி அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார், மற்றும் யஷ் தயாள் ஆகியோரை வதக்கவைத்துள்ளது.

க்ளென் மேக்ஸ்வெல், ஃபேஃப் டூபிளசி முதலிய ஸ்டார் வீரர்கள் பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் 2021 முதல் ஆர்சிபி அணியில் ஒரு அங்கமாக இருந்த க்ளென் மேக்ஸ்வெல் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்,

Retention அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு ஆர்சி நிர்வாகம் தன்னுடன் உரையாடியது குறித்து மேக்ஸ்வெல் பாசிட்டிவாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர், மோ போபாட் மற்றும் ஆண்டி ஃப்ளவர் ஆகியோரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

நான் விளையாட போவதில்லை; எனக்கு பதிலாக யாராவது ஆடட்டும்- ஓபனாக சொன்ன மேக்ஸ்வெல்!

நான் விளையாட போவதில்லை; எனக்கு பதிலாக யாராவது ஆடட்டும்- ஓபனாக சொன்ன மேக்ஸ்வெல்!

மேக்ஸ்வெல்

நாங்கள் ஷூம் உரையாடலில் அமர்ந்தோம், அவர்கள் நான் தக்கவைக்கப்படவில்லை என்ற முடிவு குறித்து எனக்கு விளக்கினர். அது உண்மையில் ஒரு அழகான வெளியேறும் சந்திப்பாக இருந்தது, நாங்கள் சுமார் அரை மணி நேரம் விளையாட்டைப் பற்றி பேசி முடித்தோம்,

RCB-ல் எனது பயணம் முடிந்துவிட்டது..? அணி குறித்து வெளிப்படையாக பேசிய மேக்ஸ்வெல்! | My Journey In Rcb Is Not Over Yet Says Glenmaxwell

அவர்களின் வியூகம் மற்றும் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள், எப்படி முன்னோக்கிச் செல்லவிருக்கிறார்கள் என்பது குறித்து பேசினர். அவர்களின் இந்த அணுகுமுறையால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவர்கள் வெளிப்படையாக தங்கள் ஊழியர்களில் சிலரையும் மாற்றுகிறார்கள்.

எனவே அவர்கள் வீரர்களுடன் பேசத் தொடங்குவதற்கு முன்பு அவர்களின் செயல்முறையை வரிசைப்படுத்த சிறிது நேரம் எடுக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர்கள் தங்கள் அணியை கட்டமைக்க மூன்று யூனிட்டாக செயல்படவிருக்கிறார்கள்.

ஆம் ஆர்சிபி அணியில் என்னுடைய பயணம் முடிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன், நான் மீண்டும் ஆர்சிபிக்கு திரும்ப நினைக்கிறேன். விளையாடுவதற்கு இது ஒரு சிறந்த உரிமையாக இருந்தது மற்றும் அங்கு எனது நேரத்தை மிகவும் ரசித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.