நான் விளையாட போவதில்லை; எனக்கு பதிலாக யாராவது ஆடட்டும்- ஓபனாக சொன்ன மேக்ஸ்வெல்!
சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ஆர்சிபி அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
விளையாட போவதில்லை
இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.
அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடி 6 போட்டிகளில் அதிகபட்சமாக 28 ரன்களுடன் ஒட்டுமொத்தமாக 32 ரன்கள் மட்டுமே எடுத்ததை அடுத்து மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளார். அவரது 6 இன்னிங்ஸில் ஸ்கோர் 0,3,28,0,1,0 ஆக மட்டுமே இருந்துள்ளது.
இதன் காரணமாக மேக்ஸ்வெல் இந்த தொடரில் பல தரப்பில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று நிகழ்ந்த போட்டியில் பெங்களூரு அணியின் பிளேயிங் 11ல் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக வில் ஜாக்ஸ் சேர்க்கப்பட்டார்.
போட்டிக்கு முன்னதாக மேக்ஸ்வெல், கேப்டன் ஃபாஃப் டுபிளெசிஸிடம் எனக்கு பதிலாக வேறு யாரையாவது முயற்சி செய்யுமாறு கோரிக்கை வைத்ததாக தெரியவந்துள்ளது. மேக்ஸ்வெல் இது குறித்து பேசுகையில், “ முதல் சில போட்டிகள் தனிப்பட்ட முறையில் எனக்கு சிறப்பாக அமையவில்லை.
"ஒரே ஆள் - போர்கண்ட சிங்கமாய் களத்தில் நின்ற மேக்ஸ்வெல்"!! கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஆட்டம்!!
மேக்ஸ்வெல்
இதன் காரணமாக நான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் அணியின் பயிற்சியாளரிடம் சென்று, இப்போது எனக்கு பதிலாக வேறு யாரையாவது முயற்சி செய்யும் என்று கூறினேன். நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையில் இருந்திருக்கிறேன்.
தொடர்ந்து, நீங்கள் இப்படி விளையாடினால், இது உங்கள் வாழ்க்கையை குழிக்குள் தள்ளலாம். உங்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஓய்வு அளிக்க இதுவே சிறந்த நேரம். இதையடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப் போவதில்லை.
விரைவில் உடல் மற்றும் நலனில் முன்னேற்றம் கண்டு, இந்த சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பவர்பிளேக்கு பிறகு எங்கள் பேட்டிங்கில் சிறிது தடுமாற்றம் இருந்து வருகிறது.
இது கடந்த சில சீசன்களில் எனது பலமாக இருந்த பேட்டிங், இந்த சீசனில் சாதகமான முறையில் பங்களிக்க முடியவில்லை என்பதை இப்போது உணர்ந்தேன். இதனால்தான் போட்டியின் முடிவுகளும், அணியின் நிலைமையும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை கொடுத்துள்ளது.
வேறொருவருக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்க இது ஒரு நல்ல நேரம் என்று நான் நினைக்கிறேன். மேலும் நான் இல்லை என்றால் யாராவது அந்த இடத்தை அவர்களாவது சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.” என்று ஆர்சிபி அணியின் நிலை பற்றி தெரிவித்துள்ளார்.