"ஒரே ஆள் - போர்கண்ட சிங்கமாய் களத்தில் நின்ற மேக்ஸ்வெல்"!! கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஆட்டம்!!
நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஆளாக நின்று ஆஸ்திரேலியா அணியின் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டத்தை முடித்து வைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பேட்டிங்
நேற்றைய லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அரை இறுதி வாய்ப்பை பிரகாச படுத்திக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 291 ரன்களை குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஸத்ரான், 143 பந்துகளில் 129 ரன்கள் எடுத்திருந்தார். ரஷித் கான் 35 ரன்கள் எடுத்திருந்தார். ரஹ்மத் ஷா 30 ரன்கள், ஹஷ்மதுல்லா ஷாய்தி 26 ரன்கள், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 22 ரன்கள் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்திருந்தனர்.
பின்னர், 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து அதிர்ச்சியை கொடுத்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் ரன் எடுக்காமலும், மிட்செல் மார்ஷ் 24 ரன்கள் , டேவிட் வார்னர் 18 ரன்கள், ஜோஷ் இங்லிஸ் டக் அவுட்டாகியும், லபுஷேன் 14 ரன்களும், ஸ்டாய்னிஸ் 6 ரன்களும் , ஸ்டார்க் 3 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து அவுட்டாகினர்.
91 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு ஒரே ஆளாக நின்று கிளென் மேக்ஸ்வெல் அசாதரண ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் வெற்றிக்கு 201 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கைவசம் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. ஆனால், அப்போது தான் மேக்ஸ்வெல் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்த ஆப்கானிஸ்தான் அணிக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
Wankhede erupted when Maxwell hits the Winning Runs.
— Ishan Joshi (@ishanjoshii) November 7, 2023
- WHAT A KNOCK ??#AUSvsAFG #AUSvAFG #Maxwell pic.twitter.com/me8aLfHbrV
அவர் 128 பந்துகளில் 21 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களை விளாசி 201 ரன்களை குவித்து ஒரே ஆளாக அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் அவர் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதும், மனம்தளராத ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல், அதன் பிறகு தான் அதகளப்படுத்தினர் என்றே கூறலாம்.
முடிவில், ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து அரை இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றது. மறுமுனையில், மேக்ஸ்வெல்லுடன் கம்மின்ஸ் 68 பந்துகளில் 12 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.