சேலம் வழியாக செல்லும் இந்த 10 ரயில்கள் ரத்து - திடீர் அறிவிப்பு! எந்த தேதிகளில் தெரியுமா?

Tamil nadu Department of Railways Salem
By Swetha Jun 20, 2024 04:22 AM GMT
Report

சேலம் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்கள் ரத்து 

செகந்திராபாத் கோட்டம் ஆசிபாபாத் சாலையில் இருந்து ரெச்னி சாலை வழியே ரயில் நிலையங்களுக்கு பயணிக்க 3வது ரயில் பாதையை இயக்குவதற்கு பொறியியல் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி, இந்த 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சேலம் வழியாக செல்லும் இந்த 10 ரயில்கள் ரத்து - திடீர் அறிவிப்பு! எந்த தேதிகளில் தெரியுமா? | These Ten Trains Will Be Cancelled For These Days

அதாவது, கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 21, 28 மற்றும் ஜூலை 5-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் ஹஸ்ரத் நிஜாமுதீன் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரெயில்கள் வருகின்ற 24 மற்றும் ஜூலை 1, 8ம் தேதியும்,

சென்னையில் ஒரே நாளில் 41 ரயில்கள் ரத்து...பொதுமக்களே உஷார்..!

சென்னையில் ஒரே நாளில் 41 ரயில்கள் ரத்து...பொதுமக்களே உஷார்..!

எந்த தேதிகளில்? 

கொச்சுவேலி - இந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 22, 29 ஆகிய தேதிகளிலும், இந்தூர் - கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 24, 1-ந் தேதியும், திருநெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 23, 30-ந் தேதியும், பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 25, 2-ந் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

சேலம் வழியாக செல்லும் இந்த 10 ரயில்கள் ரத்து - திடீர் அறிவிப்பு! எந்த தேதிகளில் தெரியுமா? | These Ten Trains Will Be Cancelled For These Days

மேலும், பிலாஸ்பூர் - எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 24, 1-ந் தேதியும், எர்ணாகுளம்- பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் வருகிற 26, 3-ந் தேதியும், கொச்சுவேலி - கோர்பா எக்ஸ்பிரஸ் வருகிற 24, 27, 1, 4-ந் தேதியும்,

கோர்பா - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் வருகிற 26, 29, 3, 6 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.