சென்னையில் ஒரே நாளில் 41 ரயில்கள் ரத்து...பொதுமக்களே உஷார்..!
இன்று பராமரிப்பு காரணமாக சென்னையில் மொத்தமாக 41 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்தான ரயில்கள்
எப்போதும் சென்னை புறநகர் ரயில் சேவையில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அது முன்னரே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.அந்த வகையில் இன்று ரத்தாகி இருக்கும் ரயில்கள் குறித்தான தகவல்கள் தெற்கு ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில் சேவைகள் திங்கள்கிழமை ரத்து செய்யப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை
மேலும், பயணிகள் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நண்பகல் 11.55 மணி , 12.45 மணி பிற்பகல் 1.25 மணி , 1.45 மணி , 1.55 மணி , 2.40 மணி ,3.10 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக காலை 9.30 மணிக்கு , 10.55 மணிக்கு, 11.30 மணிக்கு நண்பகல் 12.00 மற்றும் 1.00 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும், பலரும் ரயில் சேவையை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொண்டு வரும் சூழலில், இன்று 41 ரயில்கள் ரத்தாகி இருப்பது அதிர்ச்சியை கொடுத்தாலும், இன்று விடுமுறை தினம் என்பதால் பெரியளவில் மக்கள் பயணம் மேற்கொள்ளமாட்டார்கள் என நம்பலாம்.