வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..சென்னையில் எந்தெந்த ரூட்டில் போகலாம்? முழு விவரம் இதோ!
எந்த சாலைகளில் செல்லலாம் என்ற விவரத்தை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ளது.
எந்தெந்த ரூட்டு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து உள்ளது. நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
முழு விவரம்
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் போக்குவரத்தின் நிலை, எந்தெந்த சாலைகளில் மக்கள் தடையின்றி சென்று வரலாம், மூடப்பட்டு உள்ள சுரங்கப்பாதை பற்றிய விவரங்களை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ளது.
மழைநீர் தேங்கி உள்ளதன் காரணமாக மூடப்பட்டு உள்ள சுரங்கபாதைகள்
- பெரம்பூர் ரயில்வே
- கணேசபுரம்
- சுந்தரம் பாயிண்ட்
- ரங்கராஜபுரம்
- மேட்லி
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகள்:
- மேட்லி சுரங்கப்பாதை(தெற்கு)-கண்ணம்மாபேட்டை-முத்துரங்கன் சாலை-17அடி சாலை-ரங்கநாதன் சுரங்கப்பாதை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.
- பெரம்பூர் சுரங்கப்பாதை(வடக்கு)-முரசொலி மாறன் பாலம்
- சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் (தெற்கு)- வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் இருந்து நாகாஸ் நோக்கி வரும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலை சந்திப்பு வழியாக லயோலா கல்லூரிக்கு திருப்பி விடப்படும்.