கனமழை எதிரொலி.. இன்று எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
இன்று எந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுறை என்று காணலாம்.
கனமழை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து உள்ளது. நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதுபோல கனமழை முதல் அதி கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் இன்று மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக
விடுமுறை
பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,
காஞ்சிபுரம், ராணிபேட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சேலம்
, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.