ரயில் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் - எந்த நாடுகள் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க!
ரயில் மூலம் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்
வெளிநாடுகளுக்குப் பயணம்
பொதுவாக நாம் அண்டை மாநிலங்களுக்கு அல்லது வேறு ஒரு ஊர்களுக்குச் செல்ல ரயில் பயணம் செய்வதுண்டு. வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் அது விமானச் சேவையால் மட்டுமே முடியும். ஆனால் சில நாடுகளுக்கு ரயில் மூலம் பயணம் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா -வங்காள தேச எல்லையில் ஹல்திபாரி(Haldibari) ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மூலம் வங்காள தேசத்திற்குப் பயணம் செய்ய முடியும்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் ஜெய்நகர்(Jaynagar)ரயில் நிலையம் அமைந்துள்ளது.இந்த ரயில் நிலையம் இந்திய-நேபாள எல்லைக்கு அருகில் உள்ளது என்பதால் நேபாளத்திற்கு எளிமையாகச் செல்ல முடியும்.
மேற்கு வங்கத்தில் உள்ள ராதிகாபூர் ரயில் நிலையம் ஒரு ஜீரோ-பாயின்ட் ரயில் நிலையம் ஆகும். இது இந்திய- பங்களாதேச எல்லையில் அமைந்துள்ளதால் எளிமையாக செல்ல முடியும். இவை அசாம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படுகிறது.
ரயில்
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தில் உள்ள (Singhabad) ரயில் நிலையம் நேபாளம் மற்றும் இந்தியா -வங்காளதேச எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேபாளம், வங்காள தேச நாடுகளுக்கு எளிமையாகப் பயணம் செய்ய முடியும்.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள முனாபாவோரயில் நிலையம் இந்தியாவின் மேற்கு கடைசிரயில் நிலையம் ஆகும். இது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு இயக்கப்படும் தார் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யமுடியும்.
சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான், நேபாளம், வங்கதேசம் ஆகிய ஏழு நாடுகளுடன் இந்தியா எல்லை இனைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.