அரண்மனை போன்ற பிரம்மாண்ட ரயில் நிலையம் - இந்தியாவில் எந்த மாநிலத்தில் தெரியுமா..?
இந்தியாவில் மிக அழகான ரயில் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ரயில் நிலையம்
ரயில் போக்குவரத்தில் முன்னோடியாகத் திகழ்வது இங்கிலாந்து நாடு தான். இந்தியாவில் இங்கிலாந்து ஆட்சி நடைபெற்றபோது தங்கள் நிர்வாகத் தேவைக்காக இந்தியா முழுவதையும் ரயில் போக்குவரத்தால் இணைத்தது. இது போன்று சில நன்மைகள் இங்கிலாந்து ஆட்சியால் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கின்றன.
அதன்படி, ரயில் போக்குவரத்துக்காகச் சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் பிரம்மாண்டமான ரயில் நிலையங்கள் கட்டப்பட்டன. அதில் மிகவும் தத்ரூபமான முறையில் கட்டப்பட்ட மிக அழகான ரயில் நிலையம் இன்றளவும் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்தியா
ஆம் ,மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையம் 1842-ம் ஆண்டு கட்டப்பட்டது. இது மார்ச் 1996ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் CSTஎன்று பெயரிடப்பட்டது.அதன் பிறகு, 2017 ஆம் ஆண்டில், நிலையத்தின் பெயர் மீண்டும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் என மாற்றப்பட்டது.
ரயில்வே நெட்வொர்க் இந்தியாவின் உயிர்நாடியாக உள்ளது. நாள்தோறும் மில்லியன் கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். இது தான் இந்தியாவின் மிகவும் அழகான ரயில் முனையங்களில் ஒன்றாக உள்ளது.