முட்டை சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? அவசியம் தெரிஞ்சிகோங்க!
தினந்தோறும் முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை பார்க்கலாம்.
முட்டை
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நாம் உண்ணும் உணவு முறையில் ஃபபர், கொழுப்பு, கார்ப், போன்ற அனைத்து சத்துகளும் நிறைந்தவையாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக புரத சத்து உடல் வலுவுக்கு மிகவும் அவசியம்.
பெரும்பாலான மருத்துவர்கள் நமது உணவில் நிச்சயம் புரத சத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் முட்டை அதிக அளவு புரதத்தாலும் மிதமான அளவு ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கொஞ்சம் கொலஸ்டிரால் கொண்ட சூப்பர் ஃபுட் என்று சொல்லலாம்.
இதை ஏதேனும் ஒருவகையில் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த செல்களின் அளவு அதிகரிப்பது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கும். ஆனால், முட்டையில் உள்ள பாக்டீரியம் சால்மனெல்லோ என்னும் ஒருவகை பாக்டீரியா இருக்கிறது.
இது கோழியிடம் இருந்து பரவுகிறது. இந்த பாக்டீரியம் சால்மனெல்லோ நம்முடைய உடலுக்குள் அதிகமாக உள்ளே செல்லும்போது உடலுக்கு நிறைய தீமைகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
இது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் என்னும் ஆய்விதழ் வெளியிட்ட அறிக்கையில், முட்டை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துமா என்பது குறித்த ஆய்வு ஒன்றில் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்வதால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது.
தெரிஞ்சிகோங்க..
பொதுவாக உயர் ரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு ஆகிய பிரச்சினைகள் உள்ளவர்கள் தங்களுடைய உணவில் முட்டை மட்டுமல்லாது இயல்பாகவே கொலஸ்டிராலின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது என்று குறிப்பிடுகிறது. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்டிரால் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் மட்டுமே 90 மில்லி கிராம் அளவுக்கு கொலஸ்டிரால் இருக்கிறது. அந்த கொலஸ்டிராலின் அளவு ஒரு நாளைக்கு உடலுக்குத் தேவையான தினசரி கொலஸ்டிரால் தேவையில் பாதி.
அதனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டைக்கு மேல் மஞ்சள் கருவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உயர் கொலஸ்டிரால், நீரிழிவு, விதைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.
தினமும் முட்டையை அதன் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்டிராலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இந்த கொலஸ்டிரால் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிவதால் மாரடைப்பு ஆபத்துகள் உண்டாக வாய்ப்பு உள்ளது.
அதேபோல அதிக அளவு முட்டை சாப்பிடும்போது ஜீரணமடைவதற்கு அதிக நேரம் ஆகிறது. சில சமயங்களில் சரியாக ஜீரணமாகாமல் அடிவயிறறு வலி ஆகியவற்றை ஏற்படுத்தும். ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். வயிறு உப்பசம் ஏற்படலாம். சிலருக்கு வேறு சில உணவு அழற்சி அல்லது முட்டையால் அழற்சி ஏற்படுவதும் அதிகரிக்கும்.
அதிகமாக முட்டை சாப்பிடுகிறவர்களுக்கு இன்சுலி்ன சகிப்புத் தன்மையில் குறைபாடு உண்டாகுமாம். எனவே அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சாகும் என்ற பழமொழிக்கு ஏற்றதுப்போல் எந்த உணவை எடுத்துகொண்டால் ஒரு அளவுடன் உட்கொள்வதால் பல பிரச்சனைகளில் இருந்த நமது உடலை காத்துக்கொள்ளலாம்.