சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? - உயிருக்கு ஆபத்தா?
சுகர் நோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா? இதனால் உடலுக்கு ஆபத்து ஏற்படுமா என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
ஒரு முட்டை போதும்
ஒரு முட்டையில் 74 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு உள்ளது. இந்த 5 கிராம் கொழுப்பில் 186 மிலி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.
மேலும் இதில் 0.5 கிராம் அளவிற்கு மாவு சத்தானது உள்ளது மேலும் முட்டையில் ஃபைபர் போன்ற நார்ச்சத்துக்கள் உள்ளன.
ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1800 முதல் 2000 கலோரிகள் வரை தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு 300 மிலி கிராம் கொலஸ்ட்ராலை எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதய நோய்க்கு வாய்ப்பு உள்ளது
முட்டையை நீங்கள் அவித்து சாப்பிட்டால் எந்த வித பிரச்சனையும் கிடையாது. ஆனால் நீங்கள் அதனுடன் ஆயிலை சேர்த்து ஆம்லெட் ஆப்பாயில் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளும் போது தான் இந்த ஆயிலில் உள்ள கெட்ட கொழுப்பானது முட்டையில் உள்ள நல்ல கொழுப்போடு சேர்ந்து உடலில் கொழுப்பின் சதவீதத்தை திடீரென்று அதிகரித்து விடுகிறது. இதனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
முட்டையை நன்றாக அவித்து சாப்பிடுவதே சாலச் சிறந்த ஒன்றாகும். வெள்ளைக்கருவில் புரதச்சத்து மட்டும் தான் இருக்கும் ஆனால் மஞ்சள் கருவில் அதை தாண்டி வைட்டமின்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் இருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு
சர்க்கரை நோய் இருப்பவர்கள் அதிகமாக முட்டை எடுத்துக்கொள்வதை நீங்கள் தவிர்த்து விடலாம். ஆனால் முடிந்த அளவு சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு முட்டையை அவித்து சாப்பிடுவது முக்கியமான ஒன்றாகும்.
காரணம் முட்டையில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. முட்டையை காலை உணவில் எடுத்துக் கொள்வது என்பது சாலச் சிறந்த ஒன்று. நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை என்ற வீதம் வாரத்திற்கு 6 முட்டைகள் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் முட்டையை காலையில் எடுத்துக் கொள்ளும் பொழுது உங்கள் உடலின் எரிசக்தி நன்றாக வேலை செய்கிறது இன்னொன்று காலையிலேயே நீங்கள் ஒரு முட்டையை எடுத்துக்கொள்ளும் அன்று முழுவதுமே உங்களுக்கு ஒரு திருப்தி கிடைத்ததற்கான ஒரு உணர்வு இருக்கும்.
இந்த உணர்வு பிற வேளை உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ள உதவும்.
ஆகையால் எடையை குறைக்க முயலும் நபர்கள் தினமும் காலையில் ஒரு முட்டையை எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது.