தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? அவசியம் படிங்க!
தினந்தோறும் தேங்காய் பால் அருந்துவதால் ஏற்படும் நண்மைகள் குறித்து பார்கலாம்.
தேங்காய் பால்
தேங்காய் பால் பல விதமான உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. இப்படி தேங்காய் பாலை சேர்ந்து சமைக்கும் உணவுகளின் சுவையை கூட்டும். பெரும்பாலான இனிப்பு உணவுகள் செய்ய தேங்காய் பால் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
மேலும் சைவ சமையல் முதல் அசைவ சமையல் வரை சேர்க்கப்படுகிறது. இது சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி ஏராளமான நற்குணங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, குளிர்காலத்தில் தேங்காய் பால் தவறாமல் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்தும்.
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குளிர்காலத்தில் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்பிருப்பதால் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேங்காய் பாலை குடிப்பது நல்லது.
நன்மைகள்
நீரிழிவு நோயாளிகளுக்கும் தேங்காய் பால் மிகவும் நல்லது. தேங்காய் பாலை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்க தேங்காய் பாலை அன்றாட உணவின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உடலின் வளர்சி,உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவும் பயனுள்ளதாக அமைகிறது. தேங்காய் பாலில் உள்ள அனைத்து பொருட்களும் குடல் ஆரோக்கியத்தை சீராக்க உதவும். இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தேங்காய் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் நன்மை பயக்கிறது. தேங்காய் பால் இளமையாக வைத்துக்கொள்ள உதவும். சருமத்தை ஈரப்பதமாக்கவும் பிரகாசமாக்கவும் வைக்கை உதவுகிறது.
தேங்காய் பாலில் குளிப்பது அல்லது சருமத்தில் தடவுவது சருமத்தை பளபளப்பாக மாற்றும். சருமத்தை பாதுகாக்க தேங்காய் பாளை அன்றாடம் சேர்த்து வந்தால் சருமம் மின்னும். குளிர்காலத்தில் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலை தவிர்க்க தேங்காய் பாலை உட்கொள்ள வேண்டும்.