அடேங்கப்பா? தினமும் ஒரு கப் தேங்காய்பால் குடித்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும்ன்னு பாருங்க!

life-style-health
By Nandhini Jun 17, 2021 10:41 AM GMT
Report

“பிள்ளையை பெத்தால் கண்ணீரு தென்னையை பெத்தால் இளநீரு” என்று ஒரு பழமொழி நம்மிடையே வழக்கமான ஒன்று. தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

பலரும் தேங்காய் பால் அருந்துவதால் உடல் எடை கூடும் என்றும் நினைக்கின்றனர். அது தவறு, விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பாலை விட தேங்காய் பாலில் கொழுப்பு சத்து குறைவு. ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் அதிகமான இரும்பு சத்து ஒரு நாளைக்கு கிடைக்கிறது. தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். தேங்காய் பால் உங்கள் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. நீங்கள் இதை தவறாமல் உட்கொண்டால் பல கடுமையான நோய்கள் கூட குணமாகும்.

அடேங்கப்பா? தினமும் ஒரு கப் தேங்காய்பால் குடித்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும்ன்னு பாருங்க! | Life Style Health

புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் :

தேங்காய் பால் தவறாமல் உட்கொண்டால், புரோஸ்டேட் புற்றுநோயின் ஆபத்து பல மடங்கு குறைகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அறிவியல் ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உடல் எடை குறைக்க : தேங்காய் பாலில் ஒரு சிறப்பு வகை கொழுப்பு அமிலம் உள்ளது, இது எடை குறைக்க உதவுகிறது.

வாய் புண் குணமாக :

தேங்காய்ப் பாலை உட்கொண்டால், அது புண்களின் பிரச்சினையை பெருமளவில் குறைக்கிறது. நீங்கள் அதை உட்கொள்ள ஆரம்பித்ததும், வாய்ப் புண், வயிற்றப்புண்கள் குணமடையும்.

தோல் சுருக்கம் தடுக்க

அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும்.

தேங்காய் பாலின் நன்மைகள் -

  • தீப்புண் ஏற்பட்ட இடத்தில தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
  • முடியின் வளர்ச்சிக்கும், வறண்ட முடியை சரி செய்வதற்கும், தலைக்கு ஈரப்பதத்தை கொடுக்கவும் தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.
  • கொசு மற்றும் பூச்சிக் கடிக்கு மருந்தாக தேங்காய் எண்ணெய் செயல்படுகிறது. தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.
  • தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களை குணமாக்க பயன்படுகிறது.
  • குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் நிறைந்துள்ளன.
  • தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் விரைவில் குணமடையும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.