ஆட்டம் காட்டப்போகும் சனி; இந்த 5 ராசிகளுக்கு இனி கஷ்ட காலம்தான்- தலைகிழாகும் வாழ்க்கை!
எந்த ஐந்து ராசிகளுக்கு சனி பெயர்ச்சி தொடங்குகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சனி ஆட்டம்
தீபாவளி முடிந்த நிலையில், வருகின்ற நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் கும்ப ராசியில் சனி அதன் வக்ர நிலையில் இருந்து வழக்கமான நிலைக்கு மாறுகிறது. அதன் காரணமாக சில ராசிகளுக்கு தடைகளும் பிரச்சனைகளும் ஏற்படலாம்.
இந்த மாதம் பல கிரகங்கள் அதன் நிலையில் இருந்து வெவ்வேறு ராசிகளுக்கு பெயர்ச்சி அடைய உள்ளது. அந்த வகையில், வக்ர சனி மாற்றமடைவதால் 12 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை உண்டாக்கக்கூடும். அதில் ஒரு சில ராசிகளுக்கு நன்மையும் சிலவற்றுக்கு தீமையையும் அளிக்கும் என கருதப்படுகிறது.
மேஷம்
சனியின் மூன்றாவது பார்வை நேரடியாக மேஷ ராசிக்காரர்கள் மீது படுவதால் அது பல பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் வேலையில் இருப்பவர்களுக்கு சில கடுமையான, சவலான நேரங்கள் வரலாம். வேலை கூட பறிபோகலாம்.
காதல் வாழ்விலும் பிரச்சனை வரலாம். தொழிலை விரிவாக்கும் திட்டமும் நிறைவேறாமல் போகலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சனியின் இயல்பான இயக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வாழ்வில் கடும் அழுத்தம் உருவாகும். தனிப்பட்ட வாழ்வு தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகி வரும்.
யாருடனும் தேவையின்றி வாக்குவாதம் செய்யாதீர்கள். பணியிடத்திலும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது.
சிம்மம்
சனியின் இந்த நிலையால் சிம்ம ராசிக்காரர்களும் கடுமையான பணிசுமைக்கு ஆளாவார்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடனும் பிரச்சனையை சந்திக்க நேரிடலாம்.
பணியில் வளர்ச்சி இல்லாமல் கவலைக்குள்ளாகலாம். தொழிலும் கடுமையான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
மகரம்
சனியின் இந்த நிலையால் மகர ராசிக்காரர்கள் கடுமையான பொருளாதார சிக்கலுக்கு ஆளாவார்கள். கணவன் மனைவிக்கு இடையில் மனக் கசப்புகள் உருவாகும்.
பேச்சுவார்த்தையாலேயே பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
இது போன்ற நேர்ங்களில் பெரும் குழப்பத்தில் இருப்பார்கள். வெற்றி உங்கள் வசம் வராது. எனவே, உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் கவனமாக இருங்கள்.
(பொறுப்பு துறப்பு - இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)