இந்தியாவில் அதிக விவாகரத்து பெரும் மாநிலங்கள் பட்டியல் இதோ.. தமிழ்நாடும் இருக்கா?
அதிகம் விவாகத்து பெரும் மாநிலங்கள் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விவாகரத்து
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பந்தம் என்று கூறுவதுண்டு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து, மனமுறிவு மெல்ல மெல்ல அதிகரிப்பதை பார்க்க முடிகிறது. கணவன், மனைவிக்குள் ஏற்படும் மன கசப்புகள்,
சங்கடங்கள் வளந்துகொண்டே சென்று ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை போய் முடிகிறது. இப்படியாப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் விவாகரத்து அதிகம் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு?
அதன்படி, முதல் இடத்தில் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. 18.7 விகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கர்நாடகா உள்ளது. அம்மநிலத்தின் விவாகரத்து விகிதம் 11.5% உள்ளது. 8.2% விவாகரத்து சதவீதத்துடன் மேற்குவங்கம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லி அதிக விவாகரத்து நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 7.1% சதவீதத்துடன் அதிக விவாகரத்து நடக்கும் மாநிலங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
6.7 விகிதத்துடன் தெலங்கானா இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அதிக விவாகரத்து நடக்கும் மாநிலங்களில் கேரளா 6.3 சதவீதத்துடன் ஏழாவது இடத்தில் உள்ளது.