அட புதுசா இருக்கே..விவாகரத்து பெற்ற மகள்; மேளதாளத்தோடு வரவேற்ற தந்தை - viral video!

Uttarashadha Delhi Marriage Divorce
By Swetha May 02, 2024 11:06 AM GMT
Report

மகளின் விவாகரத்தை தந்தை மேளதாளத்தோடு வரவேற்று கொண்டாடிய வீடியோ வைரலாகி உள்ளது.

விவாகரத்து 

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியை சேர்ந்தவர் அனில் குமார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மகள் ஊர்வி-க்கு ஒரு பொறியாளர் ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். ஊர்வி அவரது கணவருடன் டெல்லியில் வசித்து வந்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் திருமண வாழ்கை மகிழ்ச்சியானதாக அமையவில்லை.

அட புதுசா இருக்கே..விவாகரத்து பெற்ற மகள்; மேளதாளத்தோடு வரவேற்ற தந்தை - viral video! | Father Celebrates His Daughters Divorce

திருமணமான நாட்களில் இருந்து மணமகன் வீட்டார் ஊர்வியை வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், விவாகரத்து பெற்ற பிறகு கணவன் வீட்டிலிருந்து புறப்பட்ட ஊர்வியை அவரது தந்தை மேள தாளங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கணவனின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்து Divorce-ஐ கொண்டாடி போட்டோ ஷுட் நடத்திய நடிகை..!

கணவனின் புகைப்படத்தை காலில் போட்டு மிதித்து Divorce-ஐ கொண்டாடி போட்டோ ஷுட் நடத்திய நடிகை..!

மேளதாளம்

இது தொடர்பாக வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர். அதில், இவர் ஒரு தைரியமான தந்தை. அவரது மகள் பல ஆண்டுகளாக வரதட்சனை கொடுமையில் சிக்கி தவித்துள்ளார். பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அந்த பெண்ணை சித்ரவதை செய்வதை நிறுத்தவில்லை.

அட புதுசா இருக்கே..விவாகரத்து பெற்ற மகள்; மேளதாளத்தோடு வரவேற்ற தந்தை - viral video! | Father Celebrates His Daughters Divorce

ஒரு கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் விவாகரத்து பெற்ற தனது மகளை அவரது தந்தை மேல, தாளங்கள் முழங்க வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.அவர் தனது மகளை திருமணம் முடிந்து எப்படி அனுப்பி வைத்தாரோ அப்படியே மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஊர்வியின் தந்தை, “திருமணத்திற்குப் பிறகு நாங்கள் அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்பியதைப் போலவே நாங்கள் அவளை மீண்டும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம். அவள் வாழ்க்கையை புதிதாகத் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று அனில் குமார் கூறியுள்ளார்.