இந்த 5 Credit cards உங்ககிட்ட இருக்கா? அதிக கேஷ்பேக் Offer பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
அதிக கேஷ்பேக் கிடைக்கும் 5 கிரெடிட் கார்டுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு என்பது வங்கிகளால் வழங்கப்படும் ஒரு வகை கடன் வசதி ஆகும், இது வாடிக்கையாளர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பிற்குள் கடன் வாங்க அனுமதிக்கிறது. இது வாடிக்கையாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளில் கொள்முதல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது.
நம்மில் பலர் கிரெடிட் கார்டு வைத்திருந்தாலும் அவற்றை டேட்டிங், திரைப்படங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த கிரெடிட் கார்டுகள் மூலம் கேஷ்பேக்குகளைபெற முடியும்.
அப்படி அடிக்கடி கேட்ஜெட்டுகளை வாங்கக்கூடியவராக இருந்தால் அதிக கேஷ்பேக் கிடைக்கும் 5 கிரெடிட் கார்டுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.அமேசான் பே ICICI கிரெடிட் கார்டு அமேசானில் வாங்கும் பொருட்களுக்கும் 5% கேஷ்பேக்கை பெறலாம்.
கேஷ்பேக்
கேஷ்பேக் SBI கார்டு ஆன்லைனில் செலவு செய்யும் அனைத்து பேமெண்ட்களுக்கும் 5% கேஷ்பேக் வழங்குகிறது.HDFC பேங்க் மில்லினியா கிரெடிட் கார்டு Amazon, Flipkart, Myntra மற்றும் பிற போன்ற பிரபலமான பிளாட்ஃபார்ம்களில் பேமெண்ட்களுக்கு 5% கேஷ்பேக் வழங்குகிறது.
Flipkart ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு Flipkartல் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 5% கேஷ்பேக் மற்றும் Swiggy, PVR, CultFit, Uber போன்றவற்றில் நீங்கள் செய்யும் பேமெண்ட்டுகளுக்கு 4% கேஷ்பேக் கிடைக்கும்.