இந்த 3 பேருக்கு மட்டும் பாஸ்ப்போர்ட் வேண்டாம் - எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லலாம்?
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் மிகவும் முக்கியான ஒன்றாக உள்ளது.
பாஸ்போர்ட்
102 ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்போர்ட் முறை செயல்பாட்டிற்கு வந்தது. அதற்கு முன்பு தங்கள் நாட்டிற்கு புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் காரணத்தினால் அமெரிக்காவின் முயற்சியில் இம்முறை கொண்டுவரப்பட்டது.
பின்னர் உலகளாவிய ஒன்றாக பாஸ்போர்ட் முறை மாறியுள்ளது. தற்போது நாட்டின் குடிமகன் என்பதற்கு ஆதாரமாகவும் பாஸ்போர்ட் மாறிவிட்டது. இருப்பினும் 3 பேர் மட்டும் பாஸ்போர்ட் இன்றி ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல உலகளவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
3 பேர்
அவர்கள் யார் என்று தெரியுமா? பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா மற்றும் ராணி ஆகிய 3 பேருக்கு மட்டுமே பாஸ்போர்ட் தேவையில்லாமல் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
ஜப்பான் மன்னர் மற்றும் ராணிக்காக இந்த சிறப்பு ஏற்பாட்டினை அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த 1971'இல் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு நிறைவேற்றியுள்ளது.
அதே போல, இங்கிலாந்து நாட்டின் அரசர் அல்லது ராணி - ஆட்சி செய்பவருக்கு உலகின் எங்குமே பாஸ்போர்ட் என்பது தேவையில்லை. உலகின் பல நாடுகளை இங்கிலாந்து அரச குடும்பம் ஆட்சி செய்த நிலையில், அதன் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறை வந்துள்ளது. இதில் மன்னர்க்கு மட்டுமே உரிமை இருக்கிறது.
ராணிக்கு அல்ல. எலிசபெத் ராணியாக இருந்தபோது அவருக்கு இந்த பாஸ்போர்ட் சிறப்பு சலுகை இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போதும் அவரின் கணவர் பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.