மக்களே கவனம்.. இந்த 2 நாட்களுக்கு UPI சேவை செயல்படாது - பிரபல வங்கி திடீர் அறிவிப்பு!
நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு UPI சேவை நிறுத்தப்படும் என HDFC வங்கி அறிவித்துள்ளது.
2 நாட்களுக்கு..
இன்றைய காலட்டத்தில் அதுவும் இந்தியாவின் எந்த இடத்திற்கு சென்றாலும் டிஜிட்டல் பரிவர்த்தனையானது பெரும் பங்காற்றி வருகிறது. சாலையோர கடைகளில் இருந்து மிகப்பெரிய வர்த்தக கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை இருப்பது பார்க்க முடிகிறது.
குறிப்பாக , கூகுள் பே, போன் பே , பே டி எம் உள்ளிட்ட செயலிகளின் வருகையை தொடர்ந்து , சாமானிய மக்கள் எளிமையாக டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இதையடுத்து, ஒவ்வொரு வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்திற்குள் வர தொடங்கின.
UPI மூலமாக , வங்கிகளை சொந்தமாக செயலிகளை வடிவமைத்தும் பரிவர்த்தனைகளை ஏற்படுத்தினர். இந்நிலையில், மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வங்கி அறிவிப்பு
அதில், எங்கள் விரிவான வங்கி முறைக்கு நன்றி, வாராந்திர விடுமுறைகள் மற்றும் வாரநாட்கள் உட்பட, வாரத்தின் ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் பணம் செலுத்துதல்கள் இயக்கப்படுகின்றன. எனினும், தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக இரண்டு நாட்களில் சில மணி நேரம் யுபிஐ வசதி செயல்படாது .
இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு UPI சேவை நிறுத்தப்படும் இந்த நாட்களில் குறைந்தபட்சம் சில மணி நேரங்கள் இருக்கலாம்” என தெரிவித்துள்ளது. அதாவது, நவம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை UPI சேவை மூடப்படும் என்றும்
நவம்பர் 23 ஆம் தேதி, UPI சேவை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மூன்று மணி நேரம் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே வங்கி வாடிக்கையளர்கள் ஏதேனும் அவசர கால அடிப்படையில் பணம் அனுப்புவது, இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்துவது நல்லது.