திமிரான தமிழச்சி - காதலியை அறிமுகப்படுத்திய தெருக்குரல் அறிவு!

Tamil Cinema
By Sumathi 2 மாதங்கள் முன்

பாடகர் தெருக்குரல் அறிவு தனது காதலியை சமூக வலைதள பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 தெருக்குரல் அறிவு 

என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தவர் தெருக்குரல் அறிவு. தொடர்ந்து காலா படத்தின் உரிமையை மீட்போம் பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து, விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி ரெய்டு பாடல் மூலம் பிரபலமானார்.

திமிரான தமிழச்சி - காதலியை அறிமுகப்படுத்திய தெருக்குரல் அறிவு! | Therukural Arivus Girl Friend Kalpanas Photos

அதனையடுத்து, தனுஷ், ஜீவா உள்ளிட்ட நடிகர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குறள் அறிவு இல்லாமல் மேடையில் தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

காதல்

தான் உருவாக்கிய இப்பாடலுக்கு மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தனது காதலியை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். அது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,

திமிரான தமிழச்சி - காதலியை அறிமுகப்படுத்திய தெருக்குரல் அறிவு! | Therukural Arivus Girl Friend Kalpanas Photos

"என் திமிரான தமிழச்சி" எனக் குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்ற பெண்ணைக் காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனது காதலியின் கால்களுடன் தனது கால்கள் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.