'என்ஜாய் எஞ்சாமி' பாடல் சர்ச்சை; உண்மையே இறுதியில் வெல்லும் - தெருக்குறள் அறிவு விளக்கம்
'என்ஜாய் எஞ்சாமி' பாடல் சர்ச்சையானதால் அதற்கு தெருக்குறள் அறிவு விளக்கம் கொடுத்துள்ளார்.
‘என்ஜாய் எஞ்சாமி' பாடல் சர்ச்சை
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் தெருக்குறள் அறிவு இல்லாமல் மேடையில் தீ மற்றும் மாரியம்மாள் இருவரும் என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடியது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சென்னை, மகாபலிபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்கவிழாவில் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. அப்போது, இந்நிகழ்ச்சியில் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பாடப்பட்டது.
இப்பாடலை பாடகி தீ மட்டும் பாடியதால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. உண்மையில் இந்த பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை பாடியது தீ மற்றும் தெருக்குரல் அறிவு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அறிவு பங்குபெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தெருக்குறள் அறிவு விளக்கம்
அறிவு அமெரிக்கா சென்றதால் தான் நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை என்று சில செய்திகள் வெளியானது, இந்நிலையில், இது குறித்து அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், நானே எழுதி, இயக்கி நடித்ததுதான் ‘என்ஜாய் எஞ்சாமி’. யாரும் எனக்கு இதற்கு இசையையோ, ஒரு பாடலை வரியையோ தரவில்லை. 6 மாதங்கள் இரவு பகலாக உறக்கமற்ற உழைப்பால் உருவான பாடல் அது. ஒரு வார்த்தைக்குக்கூட யாரும் பங்களிப்பு செய்யவில்லை.
நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது உங்களது பொக்கிஷங்கள் திருடப்படலாம். ஆனால், விழித்திருக்கும்போது அது நடக்க வாய்ப்பில்லை. ஜெய்பீம். உண்மையே இறுதியில் வெல்லும் என்று பதிவிட்டுள்ளார்.
More Power To You @TherukuralArivu#EnjoyEnjaami Belongs To You.. No Doubt.. And We Love You So Much.. ❤️ pic.twitter.com/vR21vzp28g
— தோழர் ஆதி™ ?? (@RjAadhi2point0) August 1, 2022