கொள்கை பாடலுக்கு தெருக்குரல் அறிவை தேர்வு செய்தது ஏன்? விஜய் சொன்ன பதில்

Vijay Tamil nadu Tamil Singers Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 28, 2024 09:30 PM GMT
Report

 தவெக கொள்கை பாடலை பாட விஜய் ஏன் தன்னை தேர்வு செய்தார் என தெருக்குரல் கூறியுள்ளார்.

தவெக மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நேற்று நடைபெற்றது. 

vijay tvk speech

இந்த மாநாட்டில் 45 நிமிடங்கள் பேசிய தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கைகள், அரசியல் எதிரி, கொள்கை எதிரி குறித்து பேசினார்.

விஜய் கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளர் - யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

விஜய் கட்சியின் அரசியல் வியூக வகுப்பாளர் - யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?

தெருக்குரல் அறிவு

அவரின் பேச்சுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது. அதோடு கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வரிகளோடு தொடங்கும் இப்பாடலை பாடகர் தெருக்குரல் அறிவு பாடியிருந்தார். இதில் விஜய்யும் கட்சியின் கொள்கை தலைவர்கள் குறித்து கூறியிருந்தார்.

தெருக்குரல் அறிவு தவெக கொள்கை பாடல்

இந்த பாடலை பாடிய தெருக்குரல் அறிவு, விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இந்த பாடலை பாட விஜய் ஏன் தன்னை தேர்வு செய்தார் என்பதையும் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “நான் விஜய்யிடம் ஏன் என்னை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு உன்னால் மட்டுமே முடியும் என்றார். என்னை நம்பி கட்சியின் கொள்கை பாடலை கொடுத்ததற்கு நன்றி விஜய் சார். உங்கள் குரலை பதிவு செய்வது என் வாழ்வின் மிகப்பெரிய மறக்க முடியாத தருணம். உங்கள் அரசியல் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.