இந்திய ஆண்களிடம் நிச்சயம் ஏதோ பிரச்சனை உள்ளது - சசி தரூர் காட்டம்!

BJP Sexual harassment India
By Swetha Aug 31, 2024 06:00 AM GMT
Report

இந்திய ஆண்களிடம் நிச்சயம் ஏதோ பிரச்சனை உள்ளது என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சசி தரூர்

கேரள திரைத்துறை பாலியல் புகார்கள், கல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை, நாடு முழுவதும் நடந்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய ஆண்களிடம் நிச்சயம் ஏதோ பிரச்சனை உள்ளது - சசி தரூர் காட்டம்! | There Is Some Problem In Indian Men Sasi Tharoor

அன்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒவ்வொரு நாளும் நான் செய்தித்தாளை எடுத்துப் பார்த்தால், பெண்கள் மீது அரங்கேறிய குற்றங்களே அதில் இருக்கிறது. அது ஒரு குழந்தையாகவோ, கல்லூரி மாணவியாகவோ, நடுத்தர வயது பெண்மணியாகவோ இருக்கலாம்.

சசி தரூரை தொடர்ந்து அசோக் கெலாட் - காங்கிரஸ் தலைவர்?

சசி தரூரை தொடர்ந்து அசோக் கெலாட் - காங்கிரஸ் தலைவர்?

ஆண்களிடம்

இந்த விஷயத்தை நம்மால் நிறுத்தமுடிவில்லை என்றால் இந்திய ஆண்களிடம் கண்டிப்பாக எதோ பிரச்சனை உள்ளதாகவே தெரிகிறது. இதுபோன்ற சம்பவங்களில் முதலில் பெரிய அளவிலான கோபம் வெளிப்படுகிறது ஆனால் அதன்பின் அடுத்த கொடூரம் நடக்கத்தான் செய்கிறது.

இந்திய ஆண்களிடம் நிச்சயம் ஏதோ பிரச்சனை உள்ளது - சசி தரூர் காட்டம்! | There Is Some Problem In Indian Men Sasi Tharoor

2012 நிர்பயா விவகாரம் தொடங்கி தொடங்கி 2024 இல் கொல்கத்தா மருத்துவர் கொலை வரை இதுதான் நடந்துள்ளது. பல வருடங்களாக எதுவும் மாறவில்லை. இதற்கு நிச்சயம் தீர்வு தேவை. அது அடிப்படையிலிருந்தே நடந்தாக வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து கேரள திரைத்துறையில் ஹேமா அறிக்கை குறித்து பேசிய அவர், திரைத்துறையில் நடக்கும் தவறுகளை வெளிக்கொண்டு வருவதில் கேரளா முன்னோடியாக இருப்பதில் எனக்குப் பெருமையே, குறைந்த பட்சம் கேரளாவிலாவது துணிந்து உண்மைகளைக் கூறத் தொடங்கியுள்ளனர் என்றார்.