ஆளாளுக்கு தனி தனியாக ஆடுறாங்க - ஒரு டீம்'அ அவுங்க இல்லை - MI மீது முன்னாள் வீரர் காட்டம்

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians
By Karthick May 01, 2024 04:48 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வியடைந்தது.

மும்பை இந்தியன்ஸ்

தோல்வி மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சீரான இடைவேளையில் விக்கெட் இழந்தது.

there is problem in mumbai indians ipl team

20 ஓவர்களில் அந்த அணி 144 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அணியில் நேஹல் வதேரா 46(41), டிம் டேவிட் 35(18) எடுத்தனர். எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

there is problem in mumbai indians ipl team

19.2 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து லக்னோ அணி வெற்றி பெற்றது. மும்பை அணியின் கொஞ்ச நஞ்ச playoff கனவும் நேற்றுடன் முடிந்து போனது. இது அணிக்கு பெரும் எதிர்மறை கருத்துக்களை பெற்று வருகின்றது.

ரோகித் பிறந்தநாளுக்கு கூட வரல - வெறுப்பை கக்கும் ஹர்டிக்! வைரல் வீடியோ

ரோகித் பிறந்தநாளுக்கு கூட வரல - வெறுப்பை கக்கும் ஹர்டிக்! வைரல் வீடியோ

குறிப்பாக அணியில் ஹர்டிக் பாண்டியா - ரோகித் சர்மா இருவருக்கும் இடையில் புகைச்சல் இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளது. இதில் குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இந்த ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருமே மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை அவரவர் சொந்த விருப்பங்களுக்கேற்ப அவர்கள் விளையாடினார்கள்.

there is problem in mumbai indians ipl team

ஒரு அணியாக திரண்டு அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அணிக்குள் ஏதோ சிக்கல்கள் இருப்பது போல தெரிகிறது. அவ்வாறு இல்லையென்றால், நல்ல வீரர்களை வைத்துக் கொண்டு இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை ஆட முடியுமா? என கூறினார்,