ரோகித் பிறந்தநாளுக்கு கூட வரல - வெறுப்பை கக்கும் ஹர்டிக்! வைரல் வீடியோ
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
ரோகித் - ஹர்டிக் பிரச்சனை
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோருக்கு மத்தியில் புகைச்சல் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா மாற்றப்பட்டதில் இருந்தே இது தொடர்பாக பல கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மும்பை அணியும் இந்த ஆண்டு தொடரில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவரை 9 போட்டிகளில் 3'இல் மட்டுமே மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் அந்த அணியின் Play-off வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இருவருக்கும் பிரச்சனை தீரவில்லை என்றும் அடுத்த ஆண்டு, ரோகித் சர்மா மும்பை அணியில் விளையாட மாட்டார் என்ற கருத்துகளுடன் இணைந்து, அணியில் சில வீரர்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் தகவல் உள்ளது.
இந்த சூழல்களுக்கு மத்தியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா,தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அவர் கேக் வெட்டி கொண்டாடிய போது, ரோகித் ஷர்மாவுடன் அணியின் வீரர்களான திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், பியூஷ் சாவ்லா ஆகியோர் இருந்த நிலையிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லை. இதுவே அவர்களுக்குள் இருக்கும் புகைச்சலை வெளிப்படுத்துவதாக பலரும் சமூகவலைதளத்தில் பதிவிடுகிறார்கள்.
The birthday celebration of Rohit Sharma. ?
— Johns. (@CricCrazyJohns) April 30, 2024
- Cutest video of the day....!!!! pic.twitter.com/XTqZQQXO9j