டீம்'ல இருக்காரு - ஆனாலும் ஹர்டிக்கை சைலண்டாக கழட்டிவிட ஸ்கெட்ச் போடும் ரோகித்!!

Hardik Pandya Rohit Sharma Indian Cricket Team T20 World Cup 2024
By Karthick Apr 30, 2024 11:09 AM GMT
Report

உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலககோப்பை டி20

உலக கோப்பை டி20 தொடர் வரும் ஜூன் 1- ஆம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்ளின் ஆர்வத்தை துண்டியுள்ள இந்த தொடர் மேற்குவங்கம் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறுகிறது.

hardik pandya rohit sharma indian team

உலக நாடுகள் இதற்காக மும்முரமாக தயாராகி வருகின்றன. உலகக்கோப்பைக்காக விளையாட போகும் அணிகள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறார்கள். இந்திய அணி கடந்த உலகக்கோப்பை 50 ஓவர் தொடரை இறுதி போட்டியில் தோற்றது.அதற்கு பரிகாரமாக ரோகித் சர்மா இந்த கோப்பையை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது.

hardik pandya rohit sharma indian team

இன்று இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்ந்து 2 தோல்வி - ஜெய் ஷா ஸ்கிரிப்டை ஓரங்கட்டிய தோனி - பிசிசிஐ உத்தரவை மீறிய CSK

தொடர்ந்து 2 தோல்வி - ஜெய் ஷா ஸ்கிரிப்டை ஓரங்கட்டிய தோனி - பிசிசிஐ உத்தரவை மீறிய CSK

மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியில்தற்போது மிடில் ஆர்டர் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

hardik pandya rohit sharma indian team

ஓப்பனர்களாக ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் வரும் நிலையில், அடுத்ததாக விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் ஒருவர் களமிறங்குவார்கள். துணை கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்ட்யா, துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் என ஆல் ரவுண்டர்கள் அடுத்த 2 இடத்திற்கு போட்டியிடுகிறார்கள். சமீபத்திய ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ஜடேஜா விளையாடுவது உறுதி.

hardik pandya rohit sharma indian team

அதே போல தான் ஹர்திக் பாண்ட்யா என்றாலும், அவரின் சமீபத்திய ஃபார்ம் கேள்விக்குரியானதாக உள்ளது. துணை கேப்டனாக ஓரிரு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அதில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், ஹர்டிக் பாண்ட்யாவிற்கு பதிலாக களமிறங்கவே ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் கலக்கும் துபே அணியில் இடம்பிடித்துள்ளார். எப்படி இந்திய அணி விளையாடப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.