ஏன் பால் பாக்கெட்டில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இல்லை? பாஜகவின் கேள்விக்கு ஆவின் விளக்கம்!

BJP
By Swetha Apr 16, 2024 07:09 AM GMT
Report

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இடம்பெறாததை குறித்து அந்நிறுவனம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்து 

ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என இணையாத்தளங்களில் தகவல் வெளியானது. எனினும் கடந்த சில நாட்களுக்கு முன் ரமலான் பண்டிகைக்கு வாழ்த்து செய்தி இடம் பெற்ற நிலையில் ஏன் தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து செய்தி இல்லை என்று பலர் கேள்விகளை எழுப்பினர்.

ஏன் பால் பாக்கெட்டில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இல்லை? பாஜகவின் கேள்விக்கு ஆவின் விளக்கம்! | There Is No Tamil New Year Wishes In Milk Packet

இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் பிரச்சாரம் செய்தபோது, ‘‘தமிழை கொண்டாடும் விதமாக, உலக தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறோம். ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்துகளை ஆவின் பால் பாக்கெட்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

ஆவின் பால் விலை உயர்வு; இவ்வளவா? அப்போ டீ, காஃபி விலை!

ஆவின் பால் விலை உயர்வு; இவ்வளவா? அப்போ டீ, காஃபி விலை!

ஆவின் விளக்கம் 

ஆனால், ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடக்கூடிய தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்து,பால் பாக்கெட்களில் இடம் பெறவில்லை.அந்த வகையில், தமிழர்களுக்கு எதிரான கட்சி திமுக என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறத" என்று விமர்சித்தார்.

ஏன் பால் பாக்கெட்டில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து இல்லை? பாஜகவின் கேள்விக்கு ஆவின் விளக்கம்! | There Is No Tamil New Year Wishes In Milk Packet

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்த ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில், பால் பாக்கெட்களில் வாழ்த்துச் செய்திகளை அச்சிட்டு விநியோகித்து வருகிறது.

இவ்விழாக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளவையாகும். தமிழ் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி இதுவரை ஆவின் பால் பாக்கெட்களில் அச்சிடப்படவில்லை. எனவே, இந்த ஆண்டும் அச்சிடப்படவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.