மீண்டும் மோடி தான் பிரதமர் - ஆனால் கூட்டணி பற்றி..? ரவீந்திரநாத் பரபரப்பு பேட்டி

O Paneer Selvam Tamil nadu Narendra Modi Theni
By Karthick Feb 29, 2024 09:29 AM GMT
Report

மீண்டும் மோடியை பிரதமராக்க என்ன வேண்டுமோ அதை செய்வோம் என தேனி எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

கூட்டணி விவகாரம்

ஓபிஎஸ் தரப்பு - பாஜக கூட்டணி உறுதியானதா..? என்ற தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணி குறித்த முடிவை எடுக்க முழு உரிமை ஓபிஎஸ்'ஸிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

theni-mp-ravindranath-says-modi-will-win-pm-again

தொடர்ந்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தங்கள் அணி இடம்பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்து வந்தாலும், தாமரை சின்னத்தில் நிற்குமாறு வலியுறுத்துவதாகவும், அதன் காரணமாக ஓபிஎஸ் தரப்பு சற்று தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

பாஜக வைத்த நிபந்தனை - தர்மசங்கடத்தில் டிடிவி ஓபிஎஸ்..?

பாஜக வைத்த நிபந்தனை - தர்மசங்கடத்தில் டிடிவி ஓபிஎஸ்..?

மீண்டும் மோடியை

இந்த பரபரப்பான சூழலில் தான் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதியான ரவீந்திரநாத் கூறும் பேசும் போது, 3-வது முறையாக மீண்டும் மோடியை பிரதமராக்க என்ன செய்யவேண்டுமோ அதனை தாங்கள் செய்வோம் என உறுதிபட தெரிவித்தார்.

theni-mp-ravindranath-says-modi-will-win-pm-again

மேலும், கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்து சென்றார். மீண்டும் பாஜக கூட்டணி தான் என்பதை ஓபிஎஸ் தரப்பு அழுத்தமாக இதன் மூலம் பதிவிடுவதாகவே அரசியல் வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.