பாஜக வைத்த நிபந்தனை - தர்மசங்கடத்தில் டிடிவி ஓபிஎஸ்..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில், கூட்டணியில் இடம்பெற பாஜக டிடிவி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் முக்கிய கண்டிஷன் ஒன்றை வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பாஜக கூட்டணி
தமிழகத்தில் அதிமுக இல்லாத கூட்டணி ஒன்றை உருவாகும் முன்னெடுப்பை பாஜக தீவிரமாக எடுத்து வருகின்றது. தற்போது வரை ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரி வேந்தர் போன்றோர் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்ட நிலையில், இன்னும் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றது.
ஏற்கனவே டிடிவி - ஓபிஎஸ் ஆகியோர் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், பாஜக தான் மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என கூறிவந்தாலும், பிரதமர் தமிழகம் வந்தபோது அவர்கள் மேடையில் இடம்பெறவில்லை.
அதிருப்தியில் ஓபிஎஸ் டிடிவி
இது அதிகப்படியான கேள்விகளை எழுப்பிய நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பினர், ஏன் பங்கேற்கவில்லை என்று விளக்கமளித்தனர்.
இந்நிலையில் தான் தற்போது, பாஜக டிடிவி மற்றும் ஓபிஎஸ் தரப்பிற்கு கடும் நிபந்தனை ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை பாஜக தரப்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது இருவருக்குமே பெரும் தர்ம சங்கடமான நிலையை கொடுத்துள்ளது என்றும் தாமரை சின்னத்தில் போட்டியிட இருவரும் தயங்குவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், பாஜக கூட்டத்தில் பங்கேற்காததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.