எம்.ஜி.ஆர் - ஜெ'வை புகழும் பிரதமர் - இல்லாத ஓபிஎஸ் - அதிமுகவிடம் நகர்கிறதா பாஜக..?
திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ் பல பங்கேற்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.
பல்லடம் பொதுக்கூட்டம்
தேர்தல் பிரச்சாரமாகவே திருப்பூர் பல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதயாத்திரை இருந்தது. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் துணையின்றி காலூன்ற நினைக்கும் பாஜக அதற்கான தேர்தலாகவே வரும் நாடாளுமன்ற தேர்தல் பார்க்கிறது.
தமிழக பாஜக தலைவரின் நடைப்பயணத்தை முடிக்கும் நிலையில், பிரதமர் மோடி வந்து கலந்து கொண்டு சிறப்பித்து மக்களிடம் உரையாற்றினார்.
அந்த மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெரும் காட்சிகளாக தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
த.மா.கா ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், தேவநாதன் போன்றோரும் கலந்து கொண்டனர். ஆனால், இந்த மேடையில் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் இடம் பெறவில்லை.
இல்லாத ஓபிஎஸ்
பாஜகவின் கூட்டணியில் தான் தங்கள் நீடிக்கிறோம் என்றும் மீண்டும் மோடி என்ற முழக்கத்தை வலுவாக வைத்து வரும் ஓபிஎஸ் மேடையில் இடம்பெறாதது, கேள்விக்குறியான விஷயமாகவே தமிழக அரசியலுக்கு பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் தலைவர்களான எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவை புகழும் பிரதமர் மோடி - மேடையில் இல்லாத ஓபிஎஸ், டிடிவி இந்த கணக்குகள் இன்னும் தமிழகத்தில் பாஜக அதிமுகவின் கூட்டணிக்கு தான் விரும்புகிறதா..? என்று கேள்விகளை சாதரணமாக எழுப்பியுள்ளது.