லெஸ்பியன் ஆசிரியை.. மாணவிக்கு கொடூரம் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

Tamil nadu
By Sumathi Dec 23, 2022 04:41 AM GMT
Report

மாணவியை, லெஸ்பியன் ஆசிரியர் தனக்கு ஜோடியாக ஆக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

லெஸ்பியன்  விவகாரம்

தேனி, மதுரை சாலை பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ் - பழனியம்மா. இவர்களது மகள் ஷாலினி. இவர் அறிவியல் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் கேர் பாட பிரிவில் படித்து வருகிறார். அங்கு ஆசிரியராக பணியாற்றுபவர் தீபா. இவருக்கு முத்துப்பாண்டி என்பவருடன் திருமணம் ஆகி 3 மாத குழந்தை உள்ளது.

லெஸ்பியன் ஆசிரியை.. மாணவிக்கு கொடூரம் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்! | Theni Lesbian Couple Were Rescued

இந்நிலையில், தீபாவுக்கும் ஷாலினிக்கும் லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிரியை ஷாலினியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவரை ஆணாக உருவகம் மாற்றி சிபு என பெயரிட்டுள்ளார். மேலும், ஷாலினியை தனது தம்பி ஆனந்த் என்பவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளார்.

கொடுமை

இதற்கிடையில், தீபாவின் கணவனுக்கு அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீபாவின் தம்பிக்கும் ஷாலினிக்கும் திருமணம் நடந்துள்ளது. ஆனந்த் தனது மனைவி ஷாலினியுடன் நெருக்கமாக பழகி வருவதை பார்த்த தீபா அதனை தடுத்து வந்துள்ளார்.

இதனால் ஷாலினிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு வரவே ஷாலினி தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அதனையடுத்து, தீபா ஷாலினியை திருவாரூர் அழைத்துச் சென்றுள்ளார். தொடர்ந்து, தீபாவை காணவில்லை என்று எழுந்த புகாரில் வழக்குப்பதிவு செய்து தேடி இருவரையும் கண்டுபிடித்துள்ளனர்.

இருவரையும் அவரவர் தாய், தந்தையுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தற்போது பெற்றோரின் பிடிவாதத்தால் நாங்கள் பிரிந்து செல்கிறோம். மீண்டும், கண்டிப்பாக இருவரும் ஒன்று சேருவோம்’ என தெரிவித்துள்ளனர்.