பல வருட காதல் போராட்டம் - ஒருவழியாக கரம்பிடித்த லெஸ்பியன் ஜோடி!

Kerala Marriage Viral Photos Relationship
By Sumathi Oct 12, 2022 01:31 PM GMT
Report

லெஸ்பியன் ஜோடியான ஆதிலா நஸ்ரின் மற்றும் பாத்திமா நூரா திருமணம் செய்து கொண்டனர்.

ஓரினச்சேர்க்கை

கேரளா, ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது தோழி பாத்திமா நூரா. இவர்களது பெற்றோர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தனர். அங்கு ஆதிலா 11ஆம் வகுப்பு படிக்கும் போது நூராவை சந்தித்துள்ளார்.

பல வருட காதல் போராட்டம் - ஒருவழியாக கரம்பிடித்த லெஸ்பியன் ஜோடி! | Lesbians Adila Nazrin And Fathima Noora Marriage

இருவரும் பழகியதில், நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பெற்றோர் நூராவை கேரளாவிற்கு அனுப்பி விட்டனர். அதனைத் தொடர்ந்து, ஆதிலா, தோழிக்காக கேரளா வந்துள்ளார். அப்போது இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

 காதல் போராட்டம்

இதனை அறிந்த பெற்றோர் இருவரையும் பிரித்து நூராவை தங்களோடு அழைத்துச் சென்றுள்ளனர். அதனையடுத்து நீராவை சந்திக்க, அவரது தோழியை அனுமதிக்கவில்லை. இதனால், அவர் போலீஸில் நூராவை கடத்திச் சென்றதாக புகாரளித்தார்.

பல வருட காதல் போராட்டம் - ஒருவழியாக கரம்பிடித்த லெஸ்பியன் ஜோடி! | Lesbians Adila Nazrin And Fathima Noora Marriage

மேலும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார். இருவரும் லெஸ்பியன் உறவில் இருப்பதாகவும், தாங்கள் சேர்ந்து வாழ கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி இருவரும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது. தற்போது, இருவரும் இணைந்து வாழ்க்கையைத் தொடங்குவது குறித்த தகவலை தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். புகைப்படங்களை வெளியிட்டு 'எப்போதும் சொந்தமாக்குங்கள்' என்ற தலைப்பில் தெரிவித்துள்ளனர். இதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.