பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்!

Kerala Viral Photos
By Sumathi 3 மாதங்கள் முன்

மலையாளத்தில் உருவாகியிருக்கும் ’ஹோலி ஊண்ட்’ என்ற லெஸ்பியன் படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஹோலி ஊண்ட்

ஓடிடி தளத்தின் வளர்ச்சிக்கு பிறகு மலையாளத்தில் புதிய சிந்தனையுடன் தயாராகும் படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் வெளிவருவதற்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டு வரும் படம் ஹோலிஊண்ட்.

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! | Malayalam Lesbian Film Holy Wound Got Opposed

அசோக் ஆர் நாத் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள பிக்பாஸ் பிரபலங்களான அம்ரிதா வினோத், ஜானகி சுதீர் ஆகியோர் நடித்துள்ளனர். ரோனி ரபேல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு உன்னி மடாவூர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லெஸ்பியன் கதைகளம்

இப்படம் நாளை நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது. அம்ரிதா வினோத்தும், ஜானகி சுதீரும் கதைப்படி பள்ளி பருவ தோழிகள். ஒருவர் ஒரு முரடனை திருமணம் செய்து கொண்டு அவனிடம் தினமும் பாலியல் டார்ச்சரை அனுபவிக்கிறார்.

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! | Malayalam Lesbian Film Holy Wound Got Opposed

இன்னொருவர் கன்னியாஸ்திரி ஆகிறார். ஒருவர் ஆணிடம் துன்பப்படுகிறார், இன்னொருவர் ஆண் வாசனையே இல்லாதவளாகிறார். ஒருகட்டத்தில் தோழிகள் இருவரும் லெஸ்பியன் ஆகிறார்கள்.

அதனை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த கதைக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்தவ அமைப்புகள் படத்தை எதிர்க்க தொடங்கியுள்ளன.

சஹஸ்ராரா சர்வதேச திரைப்பட விழா, காஷிஷ் மும்பை சர்வதேச குயர் திரைப்பட விழா மற்றும் ஃபிரேம்லைன் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச LGBTQ திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இப்படம் திரையிடப்பட்டது.

காதல் என்று வரும்போது அதற்கு பாலினம் முக்கியம் இல்லை என்பதை இப்படத்தின் வாயிலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தான் கடத்த முயன்றுள்ளதாக இயக்குநர் அசோக் தெரிவித்துள்ளார்.