தகாத உறவில் இருந்த ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை - பகீர் சம்பவம்
கள்ளக்காதல் ஜோடி ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
தேனி, அய்யனார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (45). விவசாய கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மனைவி அமரஜோதி (40) என்பவருடன் இவருக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அமரஜோதி தனியார் ஆலையில் வேலை செய்து வந்துள்ளார்.
தற்கொலை
இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் அய்யனார்புரம் அருகே உள்ள பள்ளப்பட்டி சாலையில் தனியார் தோட்டத்தில் ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனே போலீஸார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.