எல்லை மீறிய டைரக்டர்... உடந்தையாக இருந்த தாய்! மகளுக்கு நேர்ந்த கொடூரம்?
தேனி அருகே சிறுமியை வன்கொடுமை செய்த சினிமா டைரக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதற்கு உடந்தையாக இருந்த தாய் கைது செய்யப்பட்டார்.
டைரக்டர் கென்னடி
சென்னையை சேர்ந்தவர் கென்னடி. சினிமா டைரக்டரான இவர், கடந்த 2018-ஆம் ஆண்டில் தேனிக்கு ஷூட்டிங் சம்பந்தமாக சென்றுள்ளார். அப்போது படத்தில் நடிப்பதற்காக குழந்தை நட்சத்திரத்தை தேடினார். இதில் சினிமாவிற்கு ஆட்களை சேர்க்கும் ராக்கம்மா என்பவர் மூலம் ஒரு பெண் அறிமுகமானார்.
கென்னடிக்கும் அந்த பெண்ணுக்கும் நாளடைவில் நட்பு ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. தொடர்ந்து, இவர்கள் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்தும் வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சினிமா டைரக்டர் கென்னடிக்கு தனது கள்ளக்காதலியின் மகளான பிளஸ் 1 மாணவி மீது ஆசை வந்துள்ளது.
வலுக்கட்டாயமாக வன்கொடுமை
இதற்கு மறைமுகமாக தாயும் உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மதுரையில் நடந்த கோயில் திருவிழாவிற்கு சிறுமியின் தாய் சென்றுவிட்டார். அப்போது சிறுமிக்கு துணையாக கள்ளக்காதலனையும், மகனையும் வீட்டில் விட்டுச்சென்றார்.
அன்றைய தினம் சிறுமியிடம், எல்லை மீறிய டைரக்டர் கென்னடி, ஒரே நாளில் நான்கு முறை வலுக்கட்டாயமாக சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது.
சிறுமி சென்னையில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு கடந்த வாரம் சென்றபோது சிறுமியின் போக்கில் மாற்றம் இருப்பதை கண்ட சித்தப்பா, என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். இதையடுத்து தனது தாயும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து துன்புறுத்துவதாக அழுது கொண்டே கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தப்பா தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், சிறுமியின் தாய், டைரக்டர் கென்னடி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிறுமியின் தாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகாத உறவு..கணவனை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற மனைவி!