கடைசி விவசாயி மணிகண்டன் வீட்டில் திருட்டு..! திருடு போன தேசிய விருதுகள்
2 தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மணிகண்டனின் இல்லத்தில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
மணிகண்டன்
இயக்குனர் வெற்றிமாறன் - தனுஷ் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான "காக்கா முட்டை" படம் பெரும் வரவேற்பை விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மணிகண்டன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "கடைசி விவசாயி" படம் விமர்சன ரீதியில் வரவேற்கப்பட்டது.
படம் இரண்டு தேசிய விருதுகளையும் வென்று அசத்தியது. இவரின் வீடு மற்றும் அலுவலகம் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. திரைப்பட வேலையாக காரணமாக கடந்த 2 மாதங்களாக மணிகண்டன் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ளார்.
உசிலம்பட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. மதுரை வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் நாய்க்கு மணிகண்டனின் டிரைவர் நரேஷ்குமார் நேற்று மாலை உணவளிக்க சென்ற போது, கதவுகள் திறந்து அங்கிருந்த பொருட்களுடன் சேர்த்து விருதுகளும் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது.
கடைசி விவசாயி படத்திற்காக தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள், ரூ.1 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.