வீட்டுக்கு வந்து வெட்டினான்..ஒரு தலை காதல் விபரீதம்!! குட் நைட் ரேச்சல் ரெபேக்கா

Tamil Cinema Tamil Actress
By Karthick Oct 13, 2023 03:54 PM GMT
Report

தனது வாழ்வில் நடந்த ஒரு தலை காதல் விபரீதத்தை குறித்து நடிகை ரேச்சல் ரெபேக்கா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரேச்சல் ரெபேக்கா

மருத்துவரான ரேச்சல் ரெபேக்கா நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படை வெல்லும் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

rachael-rebecca-about-bad-incident-in-her-life 

அதனை தொடர்ந்து, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த படத்தை தொடர்ந்து குட் நைட், யோகிபாபுவுடன் லக்கி மான் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வீட்டுக்கு வந்து குத்தினான்

தற்போது அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஒருதலை காதலால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது பேட்டி வருமாறு, ஒரு நாள் என் வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள்,

rachael-rebecca-about-bad-incident-in-her-life

பார்த்தால் என்னை இரண்டு, மூன்று வருடங்களாக காதல் செய்யா சொல்லி டார்ச்சர் செய்த நபர் இருந்தார். யார் வேண்டும்? என்று பதட்டத்தில் கேட்டேன். அப்போது, என் கையில் இருந்த போனை பிடிங்கி எடுத்துக்கொண்டு போன் வேண்டும் என்றால் என்னை பார்க்க பஸ் ஸ்டாண்டுக்கு வா என்று கூறி அங்கிருந்து சென்றார். அப்போது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அடுத்த நாள் வீட்டில் என்னுடன் அம்மாவும் இருந்தார்.

அப்போது அவன் வீட்டிற்கு வந்து என்னுடைய மண்டையில் ஒரு வெட்டு, தோள்பட்டை கழுத்தில் வயிற்றில் எல்லாம் கத்தியால் குத்தினான்.ஆனால் அப்போது தான் நாம் சாகக்கூடாது? என்றும் ஏன் சாகவேண்டும்? - வாழவேண்டும் என்று எண்ணம் வந்தது. அதுவே என் வாழ்க்கையில் நடந்த சிறப்பான இன்சிடென்ட் என்று சொல்லுவேன். வாழ்க்கை என்பது எதிர்பாராத மேஜிக்கை நிகழ்த்தும் என்று அந்த பேட்டியில் ரேச்சல் ரெபேக்கா